மெகா சர்ச்சையை ஏற்படுத்திய 5 கிரிக்கெட் வீரர்களின் மோசமான சோசியல் மீடியா பதிவு – வித்யாசமான பதிவு

- Advertisement -

நூற்றாண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளாக துவங்கப்பட்ட கிரிக்கெட் கடந்த 50 வருடங்களில் ஒருநாள் போட்டிகள், டி20 என பல பரிணாமங்களை கடந்து வளர்ச்சி கண்டுள்ளது. அதே போல் டிஆர்எஸ் உட்பட ஏராளமான டெக்னாலஜி உட்பட கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் கண்டுள்ளது போல இந்த உலகமும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட தற்போது விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக சமூக வலைதளம் எனப்படும் சோசியல் மீடியாக்கள் மொபைல் போன்கள் வாயிலாக உலகத்தையே கைக்குள் காட்டும் அங்கமாக உருவாகியுள்ளது. அத்துடன் உணவு, உடை, இருப்பிடம் போலவே சோசியல் மீடியாவும் இப்போது பலரின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகி விட்டது.

குறிப்பாக தங்களது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக சோசியல் மீடியாவை பயன்படுத்தும் விளையாட்டு நட்சத்திரங்கள் அதில் தங்களுடைய புகைப்படங்கள், பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள் உட்பட பலவற்றை பகிர்வது வழக்கமாகும். ஆனால் இப்போதெல்லாம் சாப்பிடுவதைக் கூட சோசியல் மீடியாவில் பதிவு செய்வது போல சில வீரர்கள் எல்லை கடந்து இதை போட்டால் என்னவாகும் என்று அறியாமலேயே சர்ச்சைகளை பதிவிடுவது வழக்கமாகும். அந்த வகையில் நவீன கிரிக்கெட்டில் சில வீரர்கள் பதிவிட்டு சர்ச்சை ஏற்படுத்திய சோசியல் மீடியா பதிவுகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. நிறவெறி சர்ச்சை: கடந்த 2014 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இந்திய வீரர்கள் இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் வெஸ்ட் இண்டீசின் டேரன் சம்மி இணைந்து விளையாடினர். அந்த சீசனில் ஒரு போட்டியின் முடிவில் புவனேஸ்வர், சம்மி ஆகியோருடன் புகைப்படம் எடுத்த இஷாந்த் சர்மா “நான், புவி, காலு மற்றும் கன் ரைஸ்ஸ்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

ஹிந்தியில் காலு என்ற கருப்பன் என்று பொருள்படும் நிலையில் டேரன் சம்மியை நிறவெறி அடிப்படையில் அவர் கிண்டல் செய்தது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இருப்பினும் அப்போது கண்டுகொள்ளாத சம்மி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக “ப்ளேக் லிவ்ஸ் மேட்டர்” பிரச்சாரம் தீவிரமாக இருந்த போது இஷாந்த் சர்மா அவ்வாறு தம்மை அழைத்தது வேதனையை கொடுத்ததாக தெரிவித்தார். அத்துடன் இலங்கையின் திசாரா பெராராவையும் அவர் அவ்வாறே அழைத்ததாக சம்மி தெரிவித்தார்.

- Advertisement -

2. பட்லர் முகம்: ஐபிஎல் தொடரில் விளையாடிய போது தெளிவாக ஆங்கிலம் பேச தெரியாத இந்திய வீரர்களுடன் ஹோட்டல் அறையில் தங்கயிருந்தது மோசமான நாட்களாக அமைந்ததாக இங்கிலாந்து வீரர்கள் இயன் மோர்கன் – ஜோஸ் பட்லர் ஆகியோர் தங்களது டுவிட்டரில் மொழி வெறியை தூண்டும் வகையில் வெளிப்படையாக கிண்டலடித்து பேசினார்கள்.

அதை கேள்வி கேட்ட இந்திய ரசிகர்களையும் அவர்கள் கலாய்த்தது பெரிய சர்ச்சையானது. அதன் காரணமாக அவர்கள் அதை டெலிட் செய்து விட்டார்கள்.

- Advertisement -

3. தடை அபராதம்: இங்கிலாந்தை சேர்ந்த இளம் வீரர் ஓலி ராபின்சன் கடந்த வருடம் அறிமுகப் போட்டியில் அசத்தியதால் உலக அளவில் கவனம் ஈர்த்தார். ஆனால் அந்த கவனத்தால் 2012இல் பருவமடையாத வயதில் இனவெறியை தூண்டும் வகையில் தாறுமாறாக போட்ட அவரது ட்வீட்களை ரசிகர்கள் தோண்டி எடுத்து அம்பலப்படுத்தினர்.

அதை உடனடியாக டெலிட் செய்தாலும் அந்த மோசமான நன்னடத்தைக்காக இங்கிலாந்து வாரியத்தால் அதிரடியான தடை பெற்ற அவர் அபராதமும் செலுத்தி தற்போது மீண்டும் விளையாடி வருகிறார்.

- Advertisement -

4. நண்பரை கிண்டல்: இங்கிலாந்தின் ஜாம்பவானாக போற்றப்படும் ஜேம்ஸ் ஆண்டர்சன் சக வீரர் ஸ்டூவர்ட் ப்ராட் உடன் இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடுவதை அனைவரும் அறிவோம்.

ஆனால் ஸ்டுவர்ட் ப்ராட் முடிவெட்டை பார்த்தபோது 15 வருட லெஸ்பியன் போல் காட்சியளித்ததாக கடந்த 2010இல் ஜேம்ஸ் ஆண்டர்சன் ட்வீட் போட்டது இங்கிலாந்து ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் அதை டெலிட் செய்த அவர் விசாரணைக்கு உள்ளானாலும் ராபின்சன் போல தண்டனைகளை பெறாமல் தப்பித்தார்.

5. சீண்டப்பட்ட கோலி: இங்கிலாந்து ஸ்பின்னர் மாட் பர்க்கின்ஷன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியை கிண்டலடித்து கெட்ட வார்த்தையில் திட்டி கடந்த 2012இல் தனது ட்விட்டர் பக்கத்தில் தாறுமாறாக பதிவிட்டிருந்தார்.

ஆனால் கடந்த வருடம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட இங்கிலாந்து அணியில் அவர் தேர்வு செய்யப்பட்ட போது அவரது ட்வீட்களை தோண்டி எடுத்த இந்திய ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்தனர். அதனால் உடனடியாக டெலிட் செய்தாலும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் இப்போதும் விராட் கோலி ரசிகர்கள் திட்டி தீர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

Advertisement