
இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் ஒரு வழியாக தொடர்ந்து அசத்தத் துவங்கியுள்ளார். கடந்த 2015 முதல் நிலையற்ற வாய்ப்புகளால் தடுமாறி வந்த அவர் சமீபத்திய வங்கதேசம் மற்றும் தென்னாபிரிக்க டி20 தொடர்களில் சதமடித்தார். அதன் காரணமாக இந்திய டி20 அணியில் அவர் துவக்க வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் ஓரளவு நிலையான இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம்.
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் தனது விக்கெட் கீப்பிங் இடத்தை துருவ் ஜுரேலுடன் பகிர்ந்து கொள்ள உள்ளதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் துருவ் ஜுரேல் பேட்ஸ்மேனாக மட்டும் மிடில் ஆர்டரில் விளையாடி வந்தார். இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் தம்முடைய மாநில அணிக்காக அவர் விக்கெட் கீப்பராக விளையாடி வந்தார்.
அந்த வாய்ப்பில் ஓரளவு அசத்தியதால் கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமான அவர் வெற்றியிலும் பங்காற்றினார். அதன் காரணமாக அவரை இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வருங்கால விக்கெட் கீப்பராக உருவாக்க முயற்சித்து வருகிறது. அந்த வாய்ப்பைப் பிடிப்பதற்காக 2025 ஐபிஎல் தொடரில் அவருக்கு விக்கெட் கீப்பிங் பொறுப்பை கொடுக்க உள்ளதாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஏபி டீ வில்லியர்ஸ் யூடியூப் பக்கத்தில் சாம்சன் பேசியது பின்வருமாறு. “நாங்கள் வீரர்களுக்காகவும் உணர்வோம். துருவ் ஜுரேல் தற்சமயத்தில் டெஸ்ட் விக்கெட் கீப்பராக தனது கேரியரில் இருக்கிறார். அதனால் ஐபிஎல் தொடரிலும் அவர் ஏதோ ஒரு தருணத்தில் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும். அதை நாங்கள் விவாதித்தோம். எனவே நாங்கள் விக்கெட் கீப்பிங்கை பகிர்ந்து கொள்ள உள்ளோம்”
“நானும் ஒரு சாதாரண ஃபீல்டராக அதிகம் கேப்டன்ஷிப் செய்ததில்லை. எனவே உங்களுடைய நிலைமையை புரிந்து கொண்ட கேப்டன் என்ற முறையில் நீங்கள் சில போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்வதை நான் விரும்புகிறேன் என்று அவரிடம் கூறியுள்ளேன். இந்த முடிவு எப்படி செல்கிறது என்பதை பார்க்க வேண்டும். கண்டிப்பாக அது பாதிப்பை கொடுக்காது”
இதையும் படிங்க: டிவில பாத்துக்கோங்க.. நீங்க மட்டும் அப்படி இல்லனாலும் கடைமையை செய்ங்க.. ரோஹித் மீது ஹெர்சல் கிப்ஸ் அதிருப்தி
எப்போதும் எங்களுக்கு அணியே முக்கியம்” என்று கூறினார். அந்த வகையில் இளம் வீரருக்காக கேப்டன் என்ற முறையில் சஞ்சன் தம்முடைய விக்கெட் கீப்பிங் இடத்தை கொடுக்க முடிவெடுத்துள்ளது அவருடைய நல்ல மனதை காண்பிக்கிறது. இதற்கு இந்திய அணியிலிருந்து வெளியேறி ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ஜாம்பவான் ராகுல் டிராவிட் பின்னணி காரணமாகவும் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.