ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறும் சஞ்சு சாம்சன் செல்லப்போகும் அணி இதுதான் – விவரம் இதோ

Sanju Samson
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் வேளையில் அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போதே மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே மினி ஏலத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் மினி ஏலம் நடைபெறும் என்று தெரிகிறது.

சஞ்சு சாம்சன் செல்லப்போகும் அணி :

இந்த மினி ஏலத்தில் பல்வேறு வீரர்களின் அணி மாற்றமும் நடைபெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக வீரர்களுக்கு டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஏற்கனவே பல்வேறு நட்சத்திர வீரர்கள் ஒரு அணியில் இருந்து விலகி மற்றொரு அணிக்காக டிரேடிங் முறையில் செல்வார்கள் என்று பேசப்பட்டு வந்தது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகத்துடன் அதிருப்தியில் இருந்து வரும் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து வெளியேறி சென்னை அணிக்கு வருவார் என்று பேசப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு அவர் வருவதை சிஎஸ்கே அணியின் நிர்வாகமும் சரி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகமும் சரி அதிகாரப்பூர்வமாக மறுத்திருந்தது.

இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறும் சஞ்சு சாம்சன் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக இடம்பெற உள்ளார் என்ற உறுதியான தகவல் கிடைத்துள்ளது. டெல்லி அணியில் விளையாடி வரும் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஸ்டப்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வரும் பட்சத்தில் சஞ்சு சாம்சன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக இடம் பெறுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இரு அணிகளின் நிர்வாகமும் அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளதால் நிச்சயம் விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதோடு டெல்லி அணியில் விளையாடி வரும் கே.எல் ராகுலை கே.கே.ஆர் அணி நிர்வாகம் தங்களது அணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியாவை ஜெய்க்க வைத்த தொடர்நாயகி லேடி யுவ்ராஜ்.. தீப்தி சர்மா யாருமே செய்யாத 2 தனித்துவமான உலக சாதனை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக கேப்டனாக விளையாடி வந்த சஞ்சு சாம்சனை தாண்டி அந்த அணியின் நிர்வாகம் ரியான் பராக்கை கேப்டனாக மாற்ற அந்த அணியின் நிர்வாகம் முயற்சித்து வருவதால் தான் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து வெளியேற முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement