- Advertisement -
ஐ.பி.எல்

சி.எஸ்.கே கிடையாது.. சஞ்சு சாம்சன் செல்லப்போகும் புதிய அணி இதுதான் – விவரம் இதோ

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ள வேளையில் அடுத்த 2026-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது.

அணி மாற்றம் செய்யவிருக்கும் சஞ்சு சாம்சன் :

இந்த மினி ஏலத்தில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ஒரு சிலர் நட்சத்திர வீரர்கள் தாங்களாகவே முன்வந்து அணியிலிருந்து வெளியேறும் வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனான சஞ்சு சாம்சனும் அந்த அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக வெளியேறுவார் என்று பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

அதோடு அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டிரேடிங் செய்யவும் வாய்ப்பு இருந்ததாக ஆரம்பத்தில் பேசப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் அதனை மறுத்து விட்டதால் தற்போது சாம்சன் எந்த அணிக்கு செல்வார்? என்பது குறித்த ஆவலும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே தான் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக சாம்சன் நகரலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் டெல்லி அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வரும் கே.எல் ராகுல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாற்றம் செய்யப்படுவார் என்று பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் கே.எல் ராகுலின் இடத்தில் சஞ்சு சாம்சனை வாங்க டெல்லி கேபிட்டல்ஸ் அணி முனைப்பு காட்டும் என்று தெரிகிறது. அப்படி டெல்லி அணிக்கு சஞ்சு சாம்சன் செல்லும் பட்சத்தில் அக்சர் பட்டேல் கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சாம்சன் கேப்டன் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விராட் கோலி ஒன்னும் லண்டனில் ஊர் சுத்தல.. அந்த வாய்ப்பை பிடிக்க இதை செஞ்சாரு.. டிகே பேட்டி

கடந்த 2013-ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை 177 போட்டிகளில் விளையாடி 3 சதம் மற்றும் 26 அரைசதம் என 30 ரன்கள் சராசரியுடன் 4704 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -