விராட் கோலி ஒன்னும் லண்டனில் ஊர் சுத்தல.. அந்த வாய்ப்பை பிடிக்க இதை செஞ்சாரு.. டிகே பேட்டி

Dinesh Karthik
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார். கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக விளையாடி வரும் அவர் 27000+ ரன்கள் மற்றும் 82 சதங்கள் அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகும் அவர் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அதற்கு முன் அவரையும் ரோஹித் சர்மாவையும் கழற்றி விட தேர்வுக்குழு தயாராகியுள்ளது. அதனாலேயே அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமித்துள்ளது. அதனால் 2027 உலகக் கோப்பையில் விராட், ரோஹித் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

- Advertisement -

லண்டனில் சுத்தல:

இதற்கிடையே சமீப காலங்களாகவே விராட் கோலி இங்கிலாந்தின் லண்டன் நகரில் தம்முடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். நவீன கிரிக்கெட்டில் சூப்பர்ஸ்டாராக திகழும் அவரை இந்தியாவில் எங்கே சென்றாலும் ரசிகர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். எனவே சுதந்திரப் பறவையாக சுற்றித் திரிய விராட் கோலி லண்டனில் வசிக்க முடிவெடுத்துள்ளார். அதனால் அவ்வப்போது லண்டனில் உள்ள தெருக்களில் அவர் உலாவும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடியும்.

அதைப் பார்க்கும் ஒரு தரப்பினர் லண்டனில் சுற்றினால் இந்திய அணிக்கு எப்படி சிறப்பாக விளையாட முடியும்? என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். இந்நிலையில் விராட் கோலி ஒன்றும் லண்டனில் சுற்றவில்லை என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அங்கிருந்து கொண்டே 2027 உலகக் கோப்பை வாய்ப்பை பிடிப்பதற்காக விராட் கோலி வாரத்திற்கு 3 அமர்வுகள் கடினமானப் பயிற்சிகளை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

2027 உலகக் கோப்பை:

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளது பின்வருமாறு. “இந்த மிகப்பெரிய இடைவெளியில் விராட் கோலி லண்டனில் நீண்ட காலத்திற்குப் பின் பயிற்சி பெற்று வந்தார். வாரத்திற்கு 2 முதல் 3 வரை அவர் எளிதாக பயிற்சி செய்தார் என்பது எனக்குத் தெரியும். இந்த மனிதர் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு மிகவும் தீவிரமாக இருக்கிறார் என்பதை நான் உங்களிடம் சொல்வேன்”

இதையும் படிங்க: தம்பி இதெல்லாம் 20 வருஷத்துக்கு முன்னயே செஞ்சுட்டோம்.. மோதி பார்ப்போம் வாங்க.. கிராவ்லிக்கு கில்கிறிஸ்ட் பதிலடி

“என்னைப் பொறுத்த வரை விராட் கோலி அணியை சுற்றியிருக்கும் போது எந்த பதற்றமும் தேவையில்லை. ஏனெனில் அழுத்தத்தின் கீழ் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அதை பலமுறை செய்துள்ள அவர் மீண்டும் ஒருமுறை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement