நூற்றாண்டு சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் அத்தொடரில் வெல்லப்போவது யார் என்று அனைத்து ரசிகர்களிடமும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஆஷஸ் கோப்பையை மிகப்பெரிய கௌரவமாக கருதும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து வீரர்கள் அதை வெல்வதற்காக மைதானத்தில் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள்.
அதனால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதே ஆஷஸ் தொடரை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் பார்க்க விரும்புவதற்கான காரணமாகும். அவ்விரு அணிகளைப் பொறுத்த வரை இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியா வலுவான அணியாக பார்க்கப்படுகிறது. கடைசியாக 2010 – 11 ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து இங்கிலாந்து வென்றது.
ஜாக் கிராவ்லி சவால்:
அதன் பின் இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து அணியால் ஒரு டெஸ்ட் போட்டியை கூட வெல்ல முடியவில்லை. அந்தளவுக்கு வலுவான அணியாகத் திகழும் ஆஸ்திரலியா இம்முறையும் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இம்முறை பஸ்பால் அணுகுமுறையில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று இங்கிலாந்தினர் தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக இம்முறை பஸ்பால் ஆஸ்திரேலியாவை ஊதித் தள்ளும் என்று இங்கிலாந்து ஓப்பனிங் வீரர் ஜாக் கிராவ்லி தெரிவித்துள்ளார். இது பற்றி தி டைம்ஸ் பத்திரிகையில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் பஸ்பால் அவர்களை ஊதித் தள்ளும் அல்லவா? அது சிறப்பானது. அதற்காக ஆஸ்திரேலியர்கள் வலியை சந்தித்தால் அது எங்களுக்கு நல்லது. ஜானி பேர்ஸ்டோவை (2023இல்) அவர்கள் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட்டாக்கினர்”
கில்கிறிஸ்ட் பதிலடி:
“அதனால் மட்டுமே நாங்கள் தார்மீக அடிப்படையில் வென்றோம் என்று பேசுகிறோம். அது நாங்கள் தொடரை சமன் செய்ததன் விளைவு மட்டுமே” என்று கூறினார். இந்நிலையில் பஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடும் ஆட்டத்தை 20 வருடத்திற்கு முன்பே ஆஸ்திரேலியா விளம்பரமின்றி விளையாடி வெற்றி கண்டதாக அவருக்கு ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இந்த தொடரை தவறவிடுவது உண்மையிலேயே ஏமாற்றமா தான் இருக்கு – பேட் கம்மின்ஸ் வெளிப்படை
எனவே இம்முறை பஸ்பால் அணுகுமுறையுடன் மோதுவோம் இங்கிலாந்து சவால் விட்டால் அதை ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கும் கில்கிறிஸ்ட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்துக்கு முன்பாக நாங்கள் அதை 20 வருடத்திற்கு முன்பாக செய்தோம். அது வெறும் நீங்கள் கிரிக்கெட்டை விளையாடும் விதத்தைப் பற்றியதாகும். எனவே அது (பஸ்பால்) என்னை ஊதி தள்ளப் போவதில்லை. அது பார்க்க கண்கவர் உணர்வைத் தருகிறது. அதை எடுத்து வாருங்கள்” என்று கூறினார்



