இந்த தொடரை தவறவிடுவது உண்மையிலேயே ஏமாற்றமா தான் இருக்கு – பேட் கம்மின்ஸ் வெளிப்படை

Pat Cummins
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடயிருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது அக்டோபர் 19-ஆம் தேதி துவங்குகிறது.

இந்திய அணிக்கெதிரான தொடரை தவறவிடுவது ஏமாற்றம் : பேட் கம்மின்ஸ்

அதன்காரணமாக இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் 2 குழுக்களாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டிற்கு புறப்பட்டனர். இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் இந்திய அணியுடன் இணைந்து விளையாட இருப்பதால் இந்த தொடரானது அனைவரது மத்தயிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இந்த ஒருநாள் தொடரை தவறவிடுவது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணியில் ஒரு அங்கமாக இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு தொடரிலுமே அவர்களது பங்கு இருந்து வந்தது.

அவர்கள் இருவரும் இங்கு வந்து விளையாட இருப்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இதுவே அவர்கள் இருவரையும் இங்கு பார்ப்பது கடைசி முறையாக இருக்கலாம். அவர்கள் இருவருமே இந்திய அணியின் 2 ஜாம்பவான்கள். அவர்களுக்கு எதிராக விளையாடும் போது எப்போதுமே ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு அமோகமாக இருக்கும்.

- Advertisement -

காயத்தால் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் விளையாட முடியாமல் போனதில் ஏமாற்றம் அடைகிறேன். முக்கியமான இந்த தொடரில் விளையாட முடியாமல் போனதில் மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த தொடரை காண அதிகளவிலான ரசிகர்கள் நேரில் வருவார்கள்.

இதையும் படிங்க : சுப்மன் கில்லுக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேணும்.. ரோஹித் மற்றும் கோலி அதை கத்துக்கொடுப்பாங்க – இயான் பிஷப்

எதிர்வரும் அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது நடைபெறவுள்ளது. அதற்காக தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement