இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்தாவது டி20 போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 கிரிக்கெட் தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணி பெற்ற இந்த பிரமாதமான வெற்றி பலது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
ஐ.பி.எல் போட்டிகளை தவறவிட இருக்கும் சாம்சன் :
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த ஐந்தாவது டி20 போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது மட்டுமின்றி 7 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 16 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் முதல் ஓவரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
கைவிரலில் பந்து பட்டதால் வலியை உணர்ந்த அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு அவர் பேட்டிங் செய்திருந்திருந்தாலும் இரண்டாம் பாதியில் போது அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வராததால் மாற்றுவீரராக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி : சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்டுள்ள காயம் தீவிரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் இந்த காயத்திலிருந்து குணமடைய குறைந்தது ஒன்றரை மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. தற்போது திருவனந்தபுரம் சென்றுள்ள அவர் விரைவில் பெங்களூரு சென்று தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து சிகிச்சை மற்றும் பயிற்சியை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
அதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரை யார் நினைத்தாலும் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு எதிர்வரும் மார்ச் 24-ஆம் தேதி துவங்கும் ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் அவர் முதல் சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மாபெரும் சாதனையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர் – விவரம் இதோ
ஏனெனில் விரலில் ஏற்பட்டுள்ள காயம் தற்போது தீவிரமடைந்துள்ளதால் அதனை மேலும் பெரிதாக்க கூடாது என்று என்பதன் காரணமாக அவருக்கு முறையான சிகிச்சையும் சரியான ஓய்வும் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் சில போட்டிகளில் விளையாட முடியாமல் போகலாம். அப்படி அவர் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் அந்த அணிக்கு அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.