இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பாருங்களேன். மீண்டும் அசத்திய சாம்சன் – விவரம் இதோ

samson
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் தவித்து வரும் சூழ்நிலையிலும் சம்சோன் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்து மிரட்டி வருகிறார். கடந்த 11 இன்னிங்ஸ்களில் ஒரு இரட்டை சதம், ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதம் என தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சம்சோன் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து வங்கதேச டி20 தொடரில் இடம் பிடித்தார்.

samson

- Advertisement -

ஆனால் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அணியில் இடம்பிடித்தாலும் ஆடும் அணியில் சஞ்சு சம்சன்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் பண்டிற்கு மாற்று வீரராக அணியில் உள்ள சாம்சன் அவருக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற காரணத்தினால் இதுவரை சாம்சன் அணியில் இருந்தாலும் விளையாட முடியவில்லை.

மேலும் கடைசியாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இடம்பெற்றிருந்த சஞ்சு சம்சன் வெளியிலேயே அமர்ந்து இருந்தது ரசிகர்கள் இடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த தொடரிலும் பண்ட் மோசமான விக்கெட் கீப்பிங் செயல்பாட்டையே தொடர்ந்தார் இருந்தாலும் பேட்டிங்கில் சற்று முன்னேற்றம் கண்டு வருவதால் அவர் அணியில் நீடிக்கிறார். இருப்பினும் தனது வாய்ப்பிற்காக தொடர்ந்து இந்திய அணியுடன் பயணித்து சாம்சன் தனது இடத்தை இழக்கக் கூடாது என்பதால் உள்ளூர் போட்டிகளில் தனது கவனத்தை சிதற விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

samson 2

அதன்படி தற்போது ரஞ்சிப் போட்டியில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் பெங்கால் அணிக்கு எதிராக 116 ரன்கள் குவித்தார். மேலும் குஜராத் அணிக்கு எதிரான நடைபெற்ற போட்டியில் முக்கியமான நேரத்தில் 78 ரன்கள் குவித்தார். இதனால் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இவர் அணியில் இருந்து நீடிப்பதனை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா ? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

Advertisement