- Advertisement -
இந்திய கிரிக்கெட்

12 ஃபோர்ஸ் 3 சிக்ஸ்.. பஸ்பால் போல சஞ்சு சாம்சன் அதிரடி கம்பேக்.. 5 வருடம் கழித்து அசத்தல்.. பிசிசிஐக்கு மெசேஜ்

துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3வது ரவுண்டு போட்டிகள் அனந்தபூரில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா பி மற்றும் இந்தியா டி அணிகள் மோதும் 5வது போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா டி அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் 349 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேவ்தூத் படிக்கல் 50, கே.எஸ். பரத் 52, ரிக்கி புய் 56 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் கம்பேக்:

இருப்பினும் 6வது இடத்தில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். குறிப்பாக இங்கிலாந்தின் பஸ்பால் அணுகுமுறையை போல அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 95 பந்துகளில் சதமடித்தார். தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 12 பவுண்டரி 3 சிக்ஸருடன் 106 (101) ரன்களை 104.95 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அவுட்டானார்.

இதனால் 5 வருடங்கள் கழித்து முதல் தர கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் சதமடித்து அசத்தியுள்ளார். கடைசியாக அவர் கடந்த 2019ஆம் ஆண்டு பெங்கால் அணிக்கு எதிராக கேரளா அணிக்காக 116 ரன்கள் குவித்திருந்தார். அந்த வகையில் உள்ளூர் டெஸ்ட் போட்டியிலேயே அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் அடுத்து நடைபெறும் வங்கதேச டி20 தொடரில் இந்தியாவுக்காக விளையாட தயாராக இருக்கிறேன் என்பதை பிசிசிஐக்கு காண்பித்துள்ளார்.

- Advertisement -

ஈஸ்வரன் சதம்:

இந்தியா பி அணி சார்பில் அதிகபட்சமாக நவ்தீப் சைனி 5, ராகுல் சஹர் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்யும் இந்தியா பி அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் நங்கூரமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் ஜெகதீசன் 13, பிரபுதேசாய் 16, முஷீர் கான் 5, சூரியகுமார் யாதவ் 5, நிதிஷ் ரெட்டி 0 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

இதையும் படிங்க: சதத்தை தவற விட்டாலும் அந்த சாதனை படைப்பேன்.. அஸ்வினுடன் 199 ரன்ஸ் குவித்த திட்டம் பற்றி ஜடேஜா

ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து 116 (170) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் நிறைவுக்கு வந்த இரண்டாவது நாள் முடிவில் 210-6 ரன்கள் எடுத்துள்ள இந்தியா பி அணி இன்னும் 139 ரன்கள் பின்தங்கியுள்ளது. அந்த அணிக்கு களத்தில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 39*, ராகுல் சஹர் 0* ரன்களுடன் உள்ளனர்.

- Advertisement -