சதத்தை தவற விட்டாலும் அந்த சாதனை படைப்பேன்.. அஸ்வினுடன் 199 ரன்ஸ் குவித்த திட்டம் பற்றி ஜடேஜா

Ravindra Jadeja
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2வது நாள் முடிவில் 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சென்னையில் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்து 113, ரவீந்திர ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் சுமாராக பேட்டிங் செய்து 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பின் 227 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் இந்தியா 2வது நாள் முடிவில் 81-3 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

ஜடேஜாவின் 300வது விக்கெட்:

கேப்டன் ரோஹித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 10, விராட் கோலி 17 ரன்களில் அவுட்டான இந்திய அணிக்கு களத்தில் சுப்மன் கில் 33*, ரிஷப் பண்ட் 12* ரன்கள் எடுத்தனர். இந்நிலையில் இப்போட்டியில் சதத்தை தவற விட்டாலும் தனது 300வது டெஸ்ட் விக்கெட்டை எடுப்பேன் என்று ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து 199 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் இன்னிங்ஸில் இந்தியாவை மீட்டெடுத்த திட்டம் பற்றியும் அவர் பேசியது பின்வருமாறு.

“இன்று நான் அவுட்டானது போட்டியின் ஒரு அங்கம். இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் நல்ல ஸ்கோர் அடிக்க வேண்டும். என்னுடைய பந்து வீச்சில் மகிழ்ச்சி. இந்த மைதானத்தில் எனது 300வது விக்கெட்டை எடுக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. இங்கிருந்து இன்னும் 120 – 150 ரன்கள் அடித்து பின்னர் வங்கதேசத்தை முடிந்தளவுக்கு வேகமாக அவுட் செய்ய முயற்சிப்போம்”

- Advertisement -

அஸ்வினுடன் சேர்ந்து:

“பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கிறது. அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உதவி இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய முதுகை வளைத்தால் விக்கெட்டுகளை எடுக்க முடியும். அஸ்வினுக்கு நான் எந்த ஆலோசனையும் சொல்லத் தேவையில்லை. நாம் எந்த தவறும் செய்யக்கூடாது என்று தான் அவரிடம் சொன்னேன்”

இதையும் படிங்க: விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இப்படி அவுட்டாக காரணம் இதுதான் – சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசல்

“ஏனெனில் பிட்ச் இருந்ததால் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தோம். நாம் சிங்கிள்களை எடுப்போம் உங்களை அதிகமாக ஓட விட மாட்டேன் என்றும் அஸ்வினிடம் சொன்னேன். அவர் தனது சொந்த ஊரில் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார். இந்த பிட்ச்சில் வேகப்பந்து வீச்சளார்கள் மற்றும் ஸ்பின்னர்களுக்கு உதவி இருக்கிறது. சில பந்துகள் சுழல்கிறது சில பந்துகள் கீழே வருகிறது” என்று கூறினார்.

Advertisement