விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இப்படி அவுட்டாக காரணம் இதுதான் – சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசல்

Manjrekar
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது இரண்டாவது நாளை நிறைவு செய்துள்ளது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 376 ரன்களை குவித்தது.

ரோஹித் மற்றும் கோலி சரிவை சந்திக்க காரணம் :

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களையும், ஜடேஜா 86 ரன்களையும் குவித்தனர். பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய வங்கதேச அணியானது 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அதன் பின்னர் தற்போது தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் வங்கதேசம் அணியை விட இந்திய அணி தற்போது 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் தலா 6 ரன்களில் ஆட்டமிழந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இரண்டாவது இன்னிங்சிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா 5 ரன்களிலும், விராட் கோலி 17 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தனர்.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது சீனியர் வீரர்களான அவர்கள் இருவரும் மீதும் விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் : விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக துலீப் டிராபி தொடரில் பங்கேற்றிருக்க வேண்டும். ஏனெனில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாகவே அவர்கள் அதிக அளவில் சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை.

இதையும் படிங்க : சச்சினின் சாதனையை தூளாக்கி உலக சாதனை படைத்த கிங் கோலியை.. காலி செய்த அம்பயர்.. கடுப்பான ரோஹித்

இதன் காரணமாக துலீப் டிராபி போட்டியில் விளையாடியிருந்தால் அவர்களுக்கு நல்ல பயிற்சி இருந்திருக்கும். இந்த ஒரு மாத கால இடைவெளியில் அவர்கள் எந்தவித போட்டியிலும் பங்கேற்காமல் நேரடியாக இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடியதாலே அவர்களுக்கு இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement