சச்சினின் சாதனையை தூளாக்கி உலக சாதனை படைத்த கிங் கோலியை.. காலி செய்த அம்பயர்.. கடுப்பான ரோஹித்

Virat Kohli
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 376 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் சொந்த மண்ணில் சதமடித்து 113, ரவீந்திர ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் எடுத்தனர்.

வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் ஆரம்ப முதலே இந்தியாவின் அதிரடியான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

தவறான தீர்ப்பு:

அதன் பின் 227 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 81-3 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் கில் 33*, பண்ட் 12* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. முன்னதாக இந்தப் போட்டியின் 2வது இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 10 ரன்களில் அவுட்டான பின் விராட் கோலி களமிறங்கினார்.

முதல் இன்னிங்ஸில் 6 ரன்களில் ஆட்டமிழந்ததால் இம்முறை விடக்கூடாது என்ற எண்ணத்துடன் நேர்த்தியாக விளையாடிய அவர் 2 பவுண்டரியுடன் 17 (37) ரன்கள் எடுத்தார். அப்போது மெகதி ஹசன் வீசிய 20வது ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்ட விராட் கோலி சரியாக அடிக்கத் தவறினார். அதனால் வங்கதேச அணியினர் எல்பிடபுள்யூ முறையில் அவுட் கேட்டதை தொடர்ந்து நடுவர் ரிச்சர்ட் கெட்டல்போரஃப் விராட் கோலி அவுட்டென அறிவித்தார்.

- Advertisement -

விராட் கோலியின் உலக சாதனை:

அதனால் ஏமாற்றமடைந்த விராட் கோலி ரிவியூ எடுக்கலாமா என்று எதிர்புறமிருந்த சுப்மன் கில்லிடம் கேட்டார். அதற்கு கில் உறுதியான ஆதரவு தெரிவிக்காததால் அவுட்டாக இருக்கும் என்று கருதி விராட் கோலி வெளியேறினார். ஆனால் ரிப்ளேவில் பார்த்த போது பந்து விராட் கோலியின் பேட்டில் உரசியதால் அவுட்டில்லை என்பது தெளிவாக தெரிய வந்தது.

இதையும் படிங்க: 300 ரன்ஸ்.. 2வது நாளிலேயே வங்கதேசத்தை மடக்கிய இந்தியா.. ஆனால் 16 வருடங்களில் ரோஹித் சாதனை

அதை பெவிலியனில் பார்த்த ரோஹித் சர்மா இது என்ன தீர்ப்பு? என்ற வகையில் கடுப்பான ரியாக்சனை கொடுத்தார். மறுபுறம் தவறான தீர்ப்பு வழங்கிய கவலையில்லாத கெட்டல்போரஃப் லேசாக புன்னகைத்தார். இருப்பினும் இப்போட்டியில் அடித்த 17 ரன்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிவேகமாக 12000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் சாதனையை உடைத்துள்ள விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி: 243 இன்னிங்ஸ்
2. சச்சின் டெண்டுல்கர்: 267 இன்னிங்ஸ்
3. குமார் சங்ககாரா: 269 இன்னிங்ஸ்

Advertisement