ஐ.பி.எல் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலே வரலாற்று சாதனை நிகழ்த்திய சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

Samson-1
- Advertisement -

2021 ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இத்தொடரில் நடந்து முடிந்த 4 மேட்சுகளும் பரபரப்பாக சென்றன. இந்தப் போட்டியும் பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் ரசிகர்கள் தங்களது நகங்களை கடிக்க வைத்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 221 என்ற பெரிய இலக்கை அடிக்க அதை பயமில்லாமல் துரத்திய ராஜஸ்தான் அணி கடைசி பந்து வரை போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

rrvspbks

- Advertisement -

இந்தத் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் முதன் முறையாக கேப்டனாக நியமிக்கப்படுள்ளார். இவர் முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் ட்ராவிட்டின் வார்ப்பு என்பது நம் அனைவருமே அறிந்த விஷயம்தான். நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி செட் செய்த 222 ரன்கள் என்ற மிகப்பெரிய டார்கெட்டை தனி ஒருவனாக துரத்தினார் சஞ்சு சாம்சன்.

கடைசி ஓவரில் 13 ரன்கள் அடிக்க வேண்டிய சூழ்நிலையில் பஞ்சாப் அணியால் 8 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. கடைசி பந்தில் 5 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் அர்ஸ்தீப் சிங் வீசிய பந்தை தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் சஞ்சு சாம்சன். கடைசி வரை களத்தில் நின்று வெற்றிக்காக போராடிய சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் அடித்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடக்கம்.

samson

இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் சஞ்சு சாம்சன். மேலும் ராஜஸ்தான் அணிக்காக 2000 ரன்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்க்கு முன் வாட்சன் மற்றும் ரஹானே ராஜஸ்தான் அணிக்காக 2000 ரன் அடித்துள்ளனர்.

samson 2

நேற்று கேப்டனாக தனது முதல் போட்டியில் விளையாடிய சாம்சன் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார் என்றே கூறலாம். ஏனெனில் பந்துவீச்சின் போது பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த போதும் அவர்களுக்கு ஊக்கமளித்தார். அதுமட்டுமின்றி சேஸிங்கின் போது கேப்டன் என்கிற வகையில் பொறுப்பினை உணர்ந்து இறுதிவரை களத்தில் நின்று சிறப்பான ஆட்டத்தினை வழங்கிய அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement