IPL 2023 : வேகம் சுழல் ரெண்டையும் ஒரே மாதிரி அடிக்கும் அவரிடம் தோனி மாதிரியே திறமை இருக்கு – ஹர்பஜன் பாராட்டு

Harbhajan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகள் பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. கடந்த வருடம் அவரது தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ராஜஸ்தான் 2008க்குப்பின் 14 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஃபைனலுக்கு சென்று குஜராத்திடம் கோப்பையை நழுவ விட்டது. அந்த நிலைமையில் இந்த தொடரில் ஆரம்பத்திலேயே வெற்றி நடை போட்டு வரும் அந்த அணி ஏப்ரல் 16ஆம் தேதி 2022 ஃபைனல் நடைபெற்ற அதே அகமதாபாத் மைதானத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று குஜராத்துக்கு எதிராக தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

GT vs RR

- Advertisement -

அந்த போட்டியில் குஜராத் நிர்ணயித்த 178 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு பட்லர் 0, ஜெய்ஸ்வால் 1, படிக்கல் 26, ரியன் பராக் 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் 55/4 என தடுமாறிய ராஜஸ்தானின் வெற்றி கேள்விக்குறியான போது உலகின் நம்பர் ஒன் டி20 மாயாஜால ஸ்பின்னரான ரசித் கான் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்ட சஞ்சு சாம்சன் 3 பவுண்டரி 6 சிக்சருடன் 60 (32) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

தோனி மாதிரியே:
இருப்பினும் அதை வீணடிக்காத வகையில் துருவ் ஜுரேல் 18 (10) ரன்களும் அஸ்வின் 10 (3) ரன்களும் எடுக்க ஹெட்மயர் 56* (26) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார். குறிப்பாக இந்த போட்டியில் பாண்டியா தம்மிடம் வம்பிழுத்த போதும் அதற்காக பதறாமல் கவனத்தை சிதற விடாமல் அடுத்த ஓவரிலேயே உலகின் நம்பர் ஒன் ஸ்பின்னரான ரசித் கானை ஹாட்ரிக் சிக்ஸர்களாக பறக்க விட்ட சஞ்சு சாம்சன் செயலால் பதிலடி கொடுத்தது அனைவரது பாராட்டுகளை பெற்றது.

Sanju Samson

இந்நிலையில் சுழல் மற்றும் வேகம் ஆகிய 2 வகையான பந்து வீச்சுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படும் திறமையை பெற்றுள்ள சஞ்சு சாம்சன் அழுத்தமான தருணத்தில் தோனியை போலவே வளைந்து கொடுக்காமல் சிறப்பாக செயல்படும் தன்மையை பெற்றுள்ளதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சஞ்சு சாம்சனிடம் மற்றுமொரு கேப்டன் இன்னிங்ஸை நாம் பார்த்துள்ளோம். இதற்கு முந்தைய காலங்களிலும் சரி இப்போதும் சரி அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகிய இருவரையும் அவர் சரிசமமாக எளிதாக எதிர்கொள்கிறார். மேலும் கிரிக்கெட்டை விரும்பி விளையாடும் வலுவான வீரரான அவருக்கு அழுத்தத்தை எப்படி உள்வாங்குவது என்பது தெரிந்துள்ளது. குறிப்பாக தோனியை போலவே அவருக்கும் தனது திறமை மீது நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

Harbhajan

அப்படி இந்த போட்டியில் மிகச் சிறப்பான வெற்றியை பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சன் 3000க்கும் மேற்பட்ட ஐபிஎல் ரன்களை எடுத்தும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு தொடர்ந்து பெறாமல் இருந்து வருவது பலருக்கும் ஏமாற்றமாகவே அமைந்து வருகிறது.

இதையும் படிங்க:CSK vs RCB : நல்லவேளை அவங்க 2 பேரும் அவுட்டானதால நாங்க தப்பிச்சோம். வெற்றி குறித்து – தோனி வெளிப்படை

குறிப்பாக 2022 சீசனில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ராஜஸ்தானை ஃபைனல் வரை அழைத்துச் சென்றதால் இந்தியாவுக்காக கிடைத்த வாய்ப்புகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை உட்பட பெரும்பாலான தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து பிசிசிஐ மற்றும் தேர்வு குழு புறக்கணித்து வருகிறது. இதைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தன்னுடைய அடுத்த போட்டியில் லக்னோ அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement