CSK vs RCB : நல்லவேளை அவங்க 2 பேரும் அவுட்டானதால நாங்க தப்பிச்சோம். வெற்றி குறித்து – தோனி வெளிப்படை

MS-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

CSK vs RCB

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை குறித்தது. சென்னை அணி சார்பாக கான்வே 83 ரன்களை குவித்தார். பின்னர் 227 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் மட்டுமே குவித்ததது.

இதன் காரணமாக 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : எப்பொழுது நாங்கள் பெங்களூருக்கு வந்தாலும் போட்டி சிறப்பாக அமைகிறது. இந்த போட்டியில் நாங்கள் எங்களுடைய திட்டத்தை மிகவும் எளிதாகவே வைத்துக்கொண்டோம்.

Theekshana

இரண்டாவது பாதியில் நிச்சயம் எங்களால் பெரிய ரன்கள் இருக்கும் பட்சத்தில் பெங்களூரு அணியை நிறுத்த முடியும் என்று நினைத்தோம். அந்த வகையில் இன்றைய போட்டியின் போது எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிவம் துபே பந்தை கிளீனாக அடிக்கும் திறனுடையவர்.

- Advertisement -

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவருக்கு சில சிக்கல் இருந்தாலும், ஸ்பின் பவுலர்களை அவர் சிறப்பாக கையாளுவார். அதோடு நாங்கள் நினைத்த அளவு முதல் இன்னிங்சில் ரன்கள் வந்ததால் அது எங்களுக்கு கூடுதல் சாதகமாக அமைந்தது. 220 ரன்களுக்கு மேல் இலக்கு என்பதனால் எதிரணியினர் அடித்துதான் விளையாடுவார்கள்.

இதையும் படிங்க : மேட்ச்ல பாட்டு பாட வந்தியா? ஜாலியாக பேட்டால் அடித்து எச்சரித்த சச்சின் – 2011 உ.கோ பின்னணியை பகிர்ந்த சேவாக்

ஒருவேளை டூபிளெஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் அவர்களது அதிரடியை தொடர்ந்து இருந்தால் நிச்சயம் 18-வது ஓவரிலேயே அவர்கள் வெற்றி பெற்று இருப்பார்கள் இருந்தாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் மைதானத்தின் தன்மையை கணித்து கடைசி நேரத்தில் மிகச் சிறப்பாக பந்துவீசி அவர்களை தடுத்து நிறுத்தினர் என வெற்றி குறித்து தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement