தற்போதைய இந்திய அணியில் அவருக்கு தான் யுவராஜ் மாதிரி சிக்ஸர் அடிக்கும் திறமை இருக்கு – டேல் ஸ்டைன் பாராட்டு

Steyn
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வாரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோற்றது. லக்னோவில் மழையால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா போராடி 249/4 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக குயின்டன் டி காக் 48 (54) ரன்களும் ஹென்றிச் க்ளாஸென் 74* (65) ரன்களும் டேவிட் மில்லர் 75* (63) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 250 ரன்களை துரத்திய இந்தியாவிற்கு கேப்டன் தவான் 4, சுப்மன் கில் 3, ருதுராஜ் கைக்வாட் 19, இஷான் கிசான் 20 என் டாப் 4 பேட்ஸ்மேன்கள் மெதுவாக விளையாடி சொற்ப ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 51/4 என ஆரம்பத்திலேயே சரிவை கண்ட இந்தியாவை அதன் பின் ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக 8 பவுண்டரியுடன் 50 (37) ரன்களும் ஷார்துல் தாகூர் 33 (31) ரன்களும் சஞ்சு சாம்சன் 86* (63) ரன்களும் எடுத்து போராடிய போதிலும் வெற்றி பெற வைக்க முடியவில்லை. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா சமீபத்திய டி20 தொடரின் தோல்விக்கு பதிலடி கொடுத்து அசத்தியுள்ளது.

யுவராஜ் மாதிரி:
முன்னதாக இப்போட்டியில் 51/4 என்ற நிலையில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 86* (63) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய சஞ்சு சாம்சன் அனைவரது பாராட்டுகளைப் பெற்றார். ஆனாலும் காகிஸோ ரபாடா வீசிய 39வது ஓவரில் ஒரு பந்தை கூட எதிர்கொள்ள முயற்சிக்காத அவர் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோயை எதிர்கொள்ள விட்டது நிறைய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக 3வது பந்தை ஆவேஷ் கான் அடித்த போது சிங்கிள் மட்டும் எடுக்க வேண்டிய அவர் டபுள் எடுத்து எதிர்ப்புறம் பாதுகாப்பாக நின்று தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டதாக சில ரசிகர்களை அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Sanju Samson Tabriz Shamsi

ஏனெனில் அந்த இடத்தில் சிங்கிள் எடுத்து எஞ்சிய 3 பந்துகளில் கணிசமான ரன்களை அடித்திருந்தால் கடைசி ஓவரில் 18 ரன்களை எடுத்த அவருக்கு இலக்கு இன்னும் குறைவாக அமைந்து வெற்றி பெற வைக்க அதிகமான வாய்ப்பு கிடைத்திருக்கும். இந்நிலையில் சிக்ஸர் கிங் என்றழைக்கப்படும் யுவராஜ் சிங் போல 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிக்கும் திறமையை சஞ்சு சாம்சன் கொண்டுள்ளார் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டைய்ன் தெரிவித்துள்ளார். அதனாலேயே கடைசி ஓவரில் அவருக்கு ஸ்ட்ரைக் போய்விடக் கூடாது என்பதற்காக 38வது ஓவரை வீசிய ககிசோ ரபாடா ஆவேஷ் கானை அவுட் செய்த அடுத்த பந்தில் அழுத்தத்தில் நோ பால் வீசியதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி இத்தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் போட்டி முடிந்த பின் பேசியது பின்வருமாறு. “ககிஸோ ரபாடா தன்னுடைய கடைசி ஓவரின் கடைசி பந்தில் நோ-பால் வீசிய போது “தயவு செய்து இதை மட்டும் செய்யாதீர்கள்” என்று நான் எனக்கு நானே கூறிக்கொண்டேன். ஏனெனில் தற்சமயம் நல்ல பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் போன்ற ஒருவர் அந்த ஒரு பந்தில் போட்டியை மாற்றி விடக்கூடியவர். அவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்துள்ளேன். குறிப்பாக கடைசி 2 ஓவர்களில் பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டு பவுண்டரி அடிக்கும் அவருடைய திறமை அபாரமானது”

Dale-Steyn

“மேலும் கடைசி ஓவரை ஷம்சி வீச வரும் போது அவருக்கு இன்றைய நாள் சுமாராக அமைந்தது என்பதை சஞ்சு சாம்சன் அறிவார். அதனால் ரபாடா நோ-பால் வீசிய போது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. ஏனெனில் கடைசி ஓவரில் 32 தேவைப்படும் போது யுவராஜ் சிங் போல 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து தனது அணியை வெற்றி பெற வைக்கும் திறமை சஞ்சு சாம்சனிடம் உள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க : டி20 உ.கோ இந்திய அணியில் பும்ராவை விட அவர் இல்லாதது தான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு – பிரட் லீ கருத்து

அவர் கூறுவது போல் கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை தம்மால் அடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தும் 2 பந்துகளை தவறவிட்டு தவறு செய்து விட்டதாக போட்டி முடிந்த பின் ஒப்புக்கொண்ட சஞ்சு சாம்சன் அடுத்த முறை இதற்காக கடுமையான பயிற்சிகளை எடுக்க உள்ளதாக கூறினார்.

Advertisement