டி20 உ.கோ இந்திய அணியில் பும்ராவை விட அவர் இல்லாதது தான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு – பிரட் லீ கருத்து

Lee
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐசிசி டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் கடந்த 2007க்குப்பின் 15 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இந்தியா களமிறங்குகிறது. இருப்பினும் ஆரம்பத்திலேயே முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறிய நிலையில் கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா வெளியேறியது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Bumrah 1

- Advertisement -

ஏனெனில் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான இந்திய அணியிலும் அபாரமாக பந்து வீசி நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து பந்து வீச்சு துறையின் முதுகெலும்பாக மாறியுள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் அனைத்து நேரங்களிலும் துல்லியமாக பந்துவீசி வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக பார்க்கப்படுகிறார். அவருக்கான மாற்று வீரர் இல்லை என்பதாலேயே இன்னும் அவருக்கு பதில் விளையாடும் வீரரை அறிவிப்பதற்கு பிசிசிஐ தாமதம் செய்து வருகிறது. இருப்பினும் வேகத்தில் அசத்தக்கூடிய முகமது சமி அல்லது ஸ்விங் செய்து அனைத்து தருணங்களிலும் சிறப்பாக பந்து வீசும் திறமையுடன் கணிசமாக பேட்டிங் செய்யும் திறமையும் பெற்றுள்ள தீபக் சஹர் அவருக்கு பதில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

உம்ரான் இல்லையா:
இந்நிலையில் வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய மைதானங்களை கொண்ட தங்களது நாட்டில் நடைபெறும் உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியில் எக்ஸ்பிரஸ் பவுலராக கருதப்படும் உம்ரான் மாலிக் இல்லாதது தமக்கு ஆச்சரியமளிப்பதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரட் லீ கூறியுள்ளார். கடந்த 2021இல் அறிமுகமாகி இந்த வருடம் ஹைதராபாத் அணிக்காக நிறைய போட்டிகளில் தொடர்ச்சியாக 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய உம்ரான் மாலிக் இந்தியாவுக்காக கடந்த ஜூலை மாதம் அயர்லாந்து தொடரில் அறிமுகமானார்.

Umran Malik IND vs IRE

ஆனால் லைன், லென்த் போன்ற விவேகத்தை பின்பற்றாமல் முழுக்க முழுக்க வேகத்தை மட்டுமே பயன்படுத்தி பந்து வீசிய அவர் ரன்களை வாரி வழங்கியதால் அதிரடியாக நீக்கப்பட்டார். இருப்பினும் ஆரம்பத்தில் அனைவருமே தடுமாறுவார்கள் என்ற நிலைமையில் வெறும் 2 போட்டிகளுக்குப்பின் மறுவாய்ப்பு கொடுக்காமல் மொத்தமாக கழற்றி விட்டது சரியல்ல என்று தெரிவித்த திலிப் வெங்சர்க்கார் போன்ற முன்னாள் வீரர்கள் பும்ராவுக்கு பதில் அவருக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

- Advertisement -

அந்த வரிசையில் உம்ரான் மாலிக் உலகக் கோப்பையில் விளையாடாதது தமக்கு ஏமாற்றமாக உள்ளதாக தெரிவிக்கும் பிரட் லீ இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த டி20 உலக கோப்பையில் உம்ரான் மாலிக் இல்லாதது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகும். அனேகமாக அவர் நிச்சயம் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீன் விளையாட வேண்டும். அவர் ஏன் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”

Lee

“ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பவுன்ஸ் மிகவும் முக்கியமானதாகும். அதே சமயம் அதிரடியான வேகத்தில் நீங்கள் வீசினாலும் கடைசி கட்ட ஓவர்களில் நீங்கள் லென்த் பந்துகளை வீசினால் அதற்கான தண்டனையை அனுபவித்து விடுவீர்கள். எனவே போட்டியின் முதல் பகுதியில் வேகம் நல்லதாகும். பின் பகுதியிலும் வேகம் நல்லதே செய்யும். ஆனால் அதை எந்த மாதிரியான திட்டத்தை வகுத்து அதற்குள் நுழைத்து பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம்”

- Advertisement -

“எனவே எக்ஸ்ட்ரா பவுன்ஸ் என்பது பேட்ஸ்மேன்களுக்கு தான் சவாலை ஏற்படுத்தும் என்பதால் அதை அவர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பது முக்கியம். குறிப்பாக இந்திய துணைக் கண்டத்தை சேர்ந்த பேட்ஸ்மேன்கள் அந்த வேகம் மற்றும் பவுன்ஸ் விளையாடி பழகியிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க : வருங்கால நட்சத்திரமாக ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த இளம் இந்திய வீரர் – முழுவிவரம் இதோ

அப்படி அதிரடியாக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட உம்ரான் மாலிக் அதற்காக மனம் தளராமல் இரானி கோப்பை போன்ற சமீபத்திய உள்ளூர் தொடர்களில் சிறப்பாக பந்து வீசியதால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளும் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement