
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெங்களூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தவான் பீல்டிங் செய்யும்போது அவரது தோள்பட்டையில் காயம் அடைந்து வெளியேறினார். பின்னர் அவர் இரண்டாவது இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வரவில்லை அவருக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கினார்.
இதனையடுத்து தவானுக்கு எக்ஸ்ரே செய்யப்பட்டது. அதன்படி அவர் விரைவில் குணமடைய வாய்ப்பில்லை என்றும் அவர் நியூஸிலாந்து தொடருக்கு தேர்வாக மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியது. அவர் காயம் குணமடைய இன்னும் நாட்கள் ஆகும் என்றும் தெரிய வந்துள்ளது இதனால் தற்போது தவானுக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடிக்கப் போகும் வீரர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பிடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த சில தொடர்களாக இந்திய டி20 அணியில் இடம் பிடித்து வரும் சஞ்சு சாம்சன் போட்டியில் களமிறங்க படாமலே வருகிறார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்று விளையாடினார். இந்த தொடரில் ஓர் ஒரு போட்டியில் விளையாடிய சாம்சன் தான் முதல் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அவர் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்து அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இருப்பினும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகமாக உள்ளதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளியுங்கள் என்ற விமர்சனம் எழுந்து வந்தன.
இந்நிலையில்தான் காயமடைந்தத தவானுக்கு பதிலாக தற்போது அணியில் அவர் இணைவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக பண்டை விளையாட வைக்காமல் அவருக்கு பதிலாக சாம்சனுக்கு சில வாய்ப்புகள் கொடுக்கலாம் என்றும் ஆதரவுகள் பெருகிவருகின்றன. நாளை அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்பதால் சாம்சனுக்கு ஆதரவாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.