நாளைய போட்டியில் களமிறங்க இளம்வீரருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு – இந்தமுறையாவது பயன்படுத்தி கொள்வாரா ?

ind

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது .

deepak 2

நாளை நடைபெற உள்ள இந்த இறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளை வென்று தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளதால் மீதம் இருக்கும் இந்த இறுதிப்போட்டியில் சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது ஒரு வீரருக்கு வாய்ப்பு கிடைப்பது உறுதியாகி உள்ளது. அந்த வீரர் யாரெனில் இந்த ஒருநாள் தொடரின் போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் தற்போது 3வது போட்டியில் மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Samson

ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி இருந்தாலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கிற காரணத்தினால் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதோடு மேலும் சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement