ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் இல்லாததால் இவரே இனி தொடர்ந்து விக்கெட் கீப்பராக இருப்பார் – பி.சி.சி.ஐ திட்டம்

- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து இரண்டாவது முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. அதனை தொடர்ந்து நாடு திரும்பியுள்ள இந்திய அணியானது அடுத்ததாக ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

IND vs WI T20I

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்போது டெஸ்ட் தொடரில் மட்டும் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் அதனை தவிர்த்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வீரர்களைக் கொண்ட அணியே விளையாடும் என்றும் அந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும் ஒரு தகவல் பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியாகி உள்ளது.

அதன்படி வெளியாகியுள்ள இந்து தகவலில் இந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் வாய்ப்புக்காக காத்திருக்கும் சில வீரர்களுக்கும் இடம் உண்டு என்று தெரிகிறது. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகிய காயம் காரணமாக அணியில் இடம்பெறாததால் இனி ஒயிட் பால் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Samson

இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகமாகி இருந்தாலும் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வரும் சஞ்சு சாம்சனுக்கு தற்போது மீண்டும் இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. நிச்சயம் இந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படும்.

- Advertisement -

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் சஞ்சு சாம்சன் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அணியிலும் இடம்பெற வாய்ப்பு உள்ளது. ஏனெனில் உலகக் கோப்பை தொடர் வரை ரிஷப் பண்ட் காயம் காரணமாக அணியில் இடம் பெறப்போவதில்லை. அதேபோன்று கே.எல் ராகுல் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் சஞ்சு சாம்சன் மீது பிசிசிஐ அதிக நம்பிக்கை வைத்து தற்போது இந்திய அணியில் அவரை இணைக்க திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க : Asia Cup 2023 : நினைச்சதை சாதித்த இந்தியா – 2023 ஆசிய கோப்பைக்கான தேதி, மைதானங்கள் – அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இந்த வாய்ப்பினை அவர் சரியாக பயன்படுத்தி விளையாடினால் நிச்சயம் அவருக்கு உலகக் கோப்பை அணியிலும் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இனிவரும் தொடர்ச்சியான வாய்ப்புகளை சஞ்சு சாம்சன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement