
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 33 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சி.எஸ்.கே அணியானது 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அந்தவகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
பின்னர் தொடர்ந்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 207 ரன்களை குவிக்க பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 19 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன் காரணமாக சி.எஸ்.கே அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்த போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக துவக்க வீரராக விளையாடிய சஞ்சு சாம்சன் 54 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் இது அவரது இரண்டாவது சதமாக பதிவாகியுள்ளது.
அதோடு அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக முதல் சி.எஸ்.கே வீரராக சஞ்சு சாம்சன் அசத்தலான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தவகையில் சஞ்சு சாம்சன் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : மும்பை அணிக்கெதிராக யாரும் செய்யாத வரலாற்று சாதனையை நிகழ்த்திய சி.எஸ்.கே – விவரம் இதோ
இத்தனை ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் எந்தவொரு சி.எஸ்.கே வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தது கிடையாது. இவ்வேளையில் நேற்றைய போட்டியில் அடித்த சதத்தின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்த சி.எஸ்.கே வீரராக சஞ்சு சாம்சன் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.