மும்பை அணிக்கெதிராக யாரும் செய்யாத வரலாற்று சாதனையை நிகழ்த்திய சி.எஸ்.கே – விவரம் இதோ

CSK vs MI
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 33 ஆவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

மும்பை அணிக்கு எதிராக சி.எஸ்.கே வரலாற்று சாதனை :

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 107 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 22 ரன்களையும் குவித்தனர். பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது :

- Advertisement -

சி.எஸ்.கே அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களில் சுருண்டது. இதன்காரணமாக 103 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணியானது அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 37 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 36 ரன்களையும் குவித்தனர்.

சி.எஸ்.கே அணி பெற்ற இந்த வெற்றியின் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரின் புள்ளி பட்டியலில் 3 வெற்றிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியது. அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் 5 ஆவது தோல்வியை சந்தித்து 8 ஆவது இடத்திற்கு சென்றது. இந்த போட்டியில் சி.எஸ்.கே அணி பெற்ற வெற்றியின் மூலம் மாபெரும் சாதனை ஒன்றினை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : பேட் கம்மின்ஸ் வந்தாலும் இஷான் கிஷன் தான் கேப்டனா நீடிக்கனும்.. காரணத்தை சொன்ன – ஹர்பஜன் சிங்

அந்தவகையில் சி.எஸ்.கே அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை எந்தவொரு ஐ.பி.எல் அணியும் மும்பை அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிடையாது. இவ்வேளையில் முதல் முறையாக சி.எஸ்.கே அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியுள்ளது. அதிலும் இந்த வெற்றி மும்பை வான்கடே மைதானத்தில் கிடைத்துள்ளது கூடுதல் சிறப்பம்சம்.

Advertisement