சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் இரண்டு லீக் ஆட்டங்களிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று அடுத்த சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சஞ்சு சாம்சனுக்காக வேண்டுகோள் வைத்த ரசிகர்கள் :
இந்நிலையில் இந்திய அணியானது தங்களது லீக் சுற்று போட்டிகளின் கடைசி ஆட்டத்தில் ஓமன் அணியை எதிர்த்து செப்டம்பர் 19-ஆம் தேதியான நாளை அபுதாபி மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி எப்படியும் எளிதில் அவர்களை வீழ்த்தி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதி.
இந்நிலையில் இந்த ஓமன் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்து நிர்வாகத்தினருக்கு எதிராக ஒரு புதிய வேண்டுகோளை முன் வைத்துள்ளனர். அந்த வகையில் ரசிகர்கள் அனைவருமே : ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் சாம்சன் துவக்க வீரராக விளையாடும் பட்சத்தில் சுப்மன் கில் மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டுமாறும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இதற்கு காரணம் யாதெனில் : நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பிளேயிங் லெவனில் இடம் பிடித்தாலும் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே மூன்றாவது போட்டியிலாவது அவரை துவக்க வீரராக களமிறக்கி சுப்மன் கில்லை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவின் வளர்ச்சிக்கு காரணமே ரோஹித் சர்மா தான்.. அவர் விட்ட பாதையை இவர் பிடிச்சிட்டாரு – அஜய் ஜடேஜா
ஏற்கனவே அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த வேளையில் சுப்மன் கில்லின் கம்பேக் காரணமாக சஞ்சு சாம்சன் இந்த தொடரில் தனது துவக்க வீரருக்கான வாய்ப்பை இழந்து தற்போது மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



