அபிஷேக் சர்மாவின் வளர்ச்சிக்கு காரணமே ரோஹித் சர்மா தான்.. அவர் விட்ட பாதையை இவர் பிடிச்சிட்டாரு – அஜய் ஜடேஜா

Ajay Jadeja and Abhishek
- Advertisement -

கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று முடிந்தது. அந்த தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது எந்த ஒரு போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டி வரை சென்று டி20 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அதன் காரணமாக 2007-ஆம் ஆண்டிற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது.

அபிஷேக் சர்மாவின் அதிரடிக்கு ரோஹித் சர்மா தான் காரணம் : அஜய் ஜடேஜா

அந்தப் போட்டி முடிந்த கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அனுபவ வீரர் விராட் கோலி மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் ஒன்றாக டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அப்படி அவர்கள் ஓய்வு பெற்றதை தொடர்ந்து டி20 அணியில் முற்றிலும் இளம் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மா விட்டு சென்ற துவக்க வீரருக்கான இடத்தை பிடித்த அபிஷேக் ஷர்மா கடந்த ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 33 ரன்கள் சராசரியுடனும், 195 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 2 சதம் மற்றும் 2 அரைசதம் என 596 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

அவரது அதிரடியான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கும் பெரியளவில் உதவி வருகிறது. இதன் காரணமாக எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரின் துவக்க வீரராகவும் அவரே இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அபிஷேக் ஷர்மா டி20 போட்டிகளில் அசத்தலாக விளையாட ரோகித் சர்மா தான் காரணம் என்று முன்னாள் இந்திய வீரரான அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசியதாவது : அபிஷேக் ஷர்மா உண்மையிலேயே பந்துவீச்சாளருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைத்து விளையாடக்கூடிய ஒரு வீரர். அதனால் தான் அவர் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடி வருகிறார். ஏற்கனவே இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா பவர்பிளே ஓவர்களில் எப்படி அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை காண்பித்து விட்டார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு நடப்பது ரொம்பவே அநியாயம் – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

அவரது வழியை கையிலெடுத்த அபிஷேக் சர்மா தற்போது அதை தனது பழக்கமாகவே மாற்றிக் கொண்டார். டி20 போட்டிகளின் போது பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாட வேண்டியது அவசியம். அந்த வகையில் அபிஷேக் சர்மா முதல் பந்தில் இருந்தே பந்துகளை பவுண்டரிக்கு விளாசி மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்து வருகிறார் என அஜய் ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement