IND vs IRE : சரவெடி பேட்டிங், அயர்லாந்தை புரட்டிய இந்தியா சாதனை – பார்ட்னர்ஷிப் போடுவதில் புதிய வரலாறு படைத்த சாம்சன் – ஹூடா

Sanju Samson Deepak Hooda
- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை 1இல் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியினர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதால் ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் இளமையும் அனுபவமும் கலந்த வீரர்களுடன் இத்தொடரில் இந்தியா களமிறங்கியது. ஜுன் 26இல் துவங்கிய முதல் போட்டியிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

அந்த நிலைமையில்இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது மற்றும் கடைசி போட்டி தலைநகர் டப்ளின் நகரில் ஜூன் 28 இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் காயமடைந்த ருதுராஜ்க்கு பதில் சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெற்ற நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு இஷான் கிசான் 3 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அந்த நிலைமையில் கடந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி வெளுத்து வாங்கிய தீபக் ஹூடா அடுத்ததாக களமிறங்கி சஞ்சு சாம்சனுடன் கைகோர்த்து அதிரடியாக ரன்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

- Advertisement -

சரவெடி பேட்டிங்:
பவர்பிளே ஓவர்களில் அயர்லாந்து பவுலர்களை பந்தாடிய இந்த ஜோடியில் ஒருபுறம் சஞ்சு சாம்சன் நிதானமாக பேட்டிங் செய்ய மறுபுறம் பட்டை கிளப்பிய தீபக் ஹூடா அதிரடியான பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். அவரைப் பார்த்த சஞ்சு சாம்சன் நானும் சளைத்தவள் அல்ல என்று தனது பங்கிற்கு பவுண்டரிகளை பறக்கவிட ஓவர்களுக்கு 10 ரன்களுக்கு மேல் குவிக்க தொடங்கிய இந்தியா 10 ஓவர்களிலேயே 100 ரன்களை தாண்டி அற்புதமான தொடக்கம் பெற்றது.

10 ஓவர்களுக்குப் பின் போட்டி போட்டுக்கொண்டு அயர்லாந்து பவுலர்களுக்கு கருணை காட்டாமல் வெளுத்த இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அனைத்தும் இருவரும் 50 நாட்களை கடந்தும் அவுட்டாகாமல் அடம் பிடித்து ரன் மழை பொழிந்தது. 3-வது ஓவரில் ஜோடி சேர்ந்து 17-வது ஓவர்கள் வரை அயர்லாந்தை பிரித்து மேய்ந்த இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஒரு வழியாக பிரிந்தது. அதில் 9 பவுண்டரி 4 சிக்சர்கள் 72 (44) ரன்களை பறக்க விட்ட சஞ்சு சாம்சன் முதல் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 15 (5) ரன்கள் எடுத்து அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

கலக்கல் ஹூடா:
மறுபுறம் ஆரம்பம் முதலே அற்புதமாக பேட்டிங் செய்து வந்த தீபக் ஹூடா 9 பவுண்டரி 2 சிக்சருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து 104 (57) ரன்களை விளாசி இந்தியாவை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்து ஆட்டமிழந்தார்.

அதனால் 200 ரன்களை கடந்து இந்தியாவுக்கு கடைசியில் ஹர்திக் பாண்டியா 13* (9) ரன்கள் எடுக்க எதிர்ப்புறம் வந்த தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் என 3 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து டக் அவுட்டானார்கள். இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 225 என்ற பெரிய ஸ்கோரை இந்தியா எடுத்து அசத்தியது. அயர்லாந்து சார்பில் கடைசி நேரத்தில் அற்புதமாக பந்து வீசிய அடைர் 3 விக்கெட்டுகளும் லிட்டில் மற்றும் எங் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisement -

புதிய சாதனை:
இப்போட்டியில் மிரட்டலாக பேட்டிங் செய்து 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சஞ்சு சாம்சன் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற ரோகித் சர்மா – கேஎல் ராகுல் சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது.

அத்துடன் டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிராக அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற பெருமையும் பெற்றது. அந்தப் பட்டியல் இதோ:
1. தீபக் ஹூடா – சஞ்சு சாம்சன் : 176 ரன்கள், அயர்லாந்துக்கு எதிராக, 2022*
2. ரோகித் சர்மா – கேஎல் ராகுல் : 165, ரன்கள் இலங்கைக்கு எதிராக, 2017
3. ரோகித் சர்மா – ஷிகர் தவான் : 160 ரன்கள், அயர்லாந்துக்கு எதிராக, 2018

மேலும் இப்போட்டியில் 225/7 ரன்கள் எடுத்த இந்தியா டி20 கிரிக்கெட் வரலாற்றில் அயர்லாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து அசத்தியது. இதற்கு முன் கடந்த 2018 இல் இதே மைதானத்தில் 213/4 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

Advertisement