
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். ஆனாலும் இங்கிலாந்து அணிக்கு ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன் காரணமாக இனி சஞ்சு சாம்சன் டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார் என்றும் ஒருநாள் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக அவருக்கு பின்னால் சதி நடக்கிறது என்று சஞ்சு சாம்சனின் தந்தை கேரள கிரிக்கெட் நிர்வாகம் மீது புகார் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான கேரளா அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் அவர் கேரள கிரிக்கெட் சங்கம் நடத்திய பயிற்சியில் பங்கேற்காதது தான் என்று கேரளா கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கேரளா கிரிக்கெட் நிர்வாகிகள் கடந்த ஆறு மாதங்களாக தனது மகனை திட்டமிட்டு சதி செய்து வருகின்றனர் என்று சஞ்சு சாம்சனின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
சஞ்சு சாம்சனுக்கு எதிராக கேரள கிரிக்கெட் நிர்வாகம் ஆறு மாதமாகவே சதி செய்து வருவது எனக்கு தெரியும். அவர் கேரளாவை விட்டு வெளியேற வேண்டும் என்கிற வகையில் கிரிக்கெட் சங்கம் இப்படி நடந்து கொண்டு இருக்கிறது. மக்களும் அவர்கள் சொல்வதை தான் கேட்கிறார்கள்.
இதையும் படிங்க : 18 விக்கெட்ஸ்.. அப்போவே சொன்னேன் கேட்கல.. சாம்பியன்ஸ் ட்ராபியில் வருணை இந்தியா மிஸ் பண்ணிடுச்சு.. டிகே பதிவு
எனவே இனியும் கேரள அணிக்காக என் மகன் விளையாடுவதை நான் விரும்பவில்லை. என் மகனுக்கு வேறு எந்த மாநில அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் அதனை ஏற்று விளையாட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.