தோனி மாதிரி முக்கிய நேரத்தில் அசத்திய சாம்சன்.. டர்னிங் பாயிண்டாக மாறிய சம்பவம் – நடந்தது என்ன?

Samson
- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய 28-வது லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது அந்த அணியை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு 3 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரின் போது த்ரில் வெற்றியை பெற்று அசத்தியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் விக்கெட் கீப்பிங் போட்டிக்கு மிகப்பெரிய திருப்புமுடியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்த தகவலும் தற்போது வைரலாகி வருகிறது.

அதோடு தோனி போன்று சஞ்சு சாம்சன் செய்த ஒரு செயல் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டினையும் பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் கடைசி கட்ட ஓவர்களில் சிறிது அதிரடி காட்டினர்.

அந்த நேரத்தில் அஷுதோஷ் சர்மா மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் களத்தில் இருந்தனர். இருவருமே அதிரடி ஆட்டக்காரர்கள் என்பதனால் ரன் குவிப்பு அதிகமாகும் அபாயம் இருந்தது. அந்த நேரத்தில் அஷுதோஷ் சர்மா சாஹல் வீசிய ஒரு ஓவரில் பந்தை தட்டி விட்டு ஒரு ரன் ஓடினார். அப்போது எதிர்புறம் இருந்த அஷுதோஷ் சர்மா ரன் ஓட வேண்டாம் என்று மறுத்தார்.

- Advertisement -

அதனால் மீண்டும் கிரீசை நோக்கி ஓடிய லிவிங்ஸ்டன் ரீச் ஆகி விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் பீல்டரிடம் இருந்து பந்தை பிடித்த சஞ்சு சாம்சன் ஸ்டம்புக்கு முன்னால் சில அடி தூரத்தில் பிடித்திருந்தாலும் தோனியை போன்று ஸ்டம்பை பார்க்காமல் பின்னோக்கி பந்தை எறிந்தார். அந்த பந்து சரியாக ஸ்டம்பிலும் பட லிவிங்ஸ்டன் ரன் அவுட் ஆனார்.

இதையும் படிங்க : இரவில் வெளிச்சம் போல.. சிஎஸ்கே’வை தோற்கடிக்க அந்த ஒரு மும்பை பிளேயர் போதும்.. எச்சரித்த அஸ்வின்

கடைசி நேரத்தில் ஹிட்டரான அவர் சிக்ஸர் விளாசும் அபாயகரமான வீரராக பார்க்கப்படும் வேளையில் அவர் ரன் அவுட்டானது கடைசி நேரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 152 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement