- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ருதுராஜ்க்கு பதிலா.. ஏசியன் கேம்ஸ் தொடரில் பாவமான அவருக்கு கேப்டனா சான்ஸ் கொடுத்துருக்கலாம்.. ஆகாஷ் சோப்ரா ஆதங்க கருத்து

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை முத்தமிட்ட இந்திய அணி அடுத்ததாக 2023 உலக கோப்பையில் களமிறங்குவதற்கு முன்பாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இருப்பினும் இந்த தொடர்களில் எதிலுமே கேரளாவை சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காதது நிறைய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

கடந்த 2015இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அதன் பின் வாய்ப்பு கிடைக்காமல் 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து 2019இல் விளையாடினார். அத்துடன் 2021 வரை தொடர்ந்து நிலையற்ற வாய்ப்புகளையே பெற்று வந்த அவர் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடி வந்தார். அதனால் கடந்த 2022ஆம் ஆண்டு ஓரளவு கிடைத்த நிலையான வாய்ப்புகளில் முதல் முறையாக அரை சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்ற அவர் தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுத்தால் நிச்சயம் அசத்துவேன் என்பதை காட்டினார்.

- Advertisement -

கேப்டனாக சான்ஸ்:
இருப்பினும் 2023 ஐபிஎல் தொடருக்கு முன் நடந்த இலங்கை, நியூசிலாந்து தொடர்களில் வாய்ப்பை பெறாத அவர் ஒரு வழியாக கடந்த மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு பெற்றார். அதில் ஒருநாள் தொடரில் அரை சதமடித்து வெற்றியில் உதவிய போதும் டி20 தொடரில் சொதப்பிய அவரை அதையே காரணமாக வைத்து 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பை அணிகளில் தேர்வுக்குழு கழற்றி விட்டது.

சொல்லப்போனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை அசத்தாத சூரியகுமார் யாதவுக்கு அந்த 2 தொடர்களிலுமே சிவப்பு சம்பளம் விரித்து வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரை விட நல்ல சராசரியை கொண்டுள்ள சஞ்சு சாம்சனுக்கு சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் களமிறங்கும் 2வது தர இந்திய அணியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் ருதுராஜ்க்கு பதிலாக சஞ்சு சாம்சன் கேப்டனாகவே செயல்படுவதற்கு தகுதியானவர் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அணியில் கூட சஞ்சு சாம்சன் இல்லாதது எனக்கு ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருக்கிறது. ஆசிய கோப்பை தொடரில் ரிசர்வ் வீரராக இருந்த அவர் தற்போது ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலும் இல்லை”

இதையும் படிங்க: ஆஸி தொடரில் இதை செஞ்சா.. பாபர் அசாமை முந்தி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனா கில் சாதனை படைப்பாரு – அசத்தல் புள்ளிவிவரம்

“அதனால் ஆசிய விளையாட்டு தொடரில் சஞ்சு சாம்சன் பெயர் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் எப்படியும் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெறப்போகாத அவருக்கு இது போன்ற தொடரில் கூட வாய்ப்பு கிடைக்காதது சரியல்ல. மேலும் உலகக் கோப்பை வாய்ப்பை நெருங்கிய அவர் இத்தொடரில் விளையாடுவதற்கு தகுதியானவர். சொல்லப்போனால் அவர் அத்தொடரின் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -