எம்.எஸ் தோனியின் மேலும் ஒரு சாதனையை நேற்றைய போட்டியில் முறியடித்த – சஞ்சு சாம்சன்

Samson and Dhoni
- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன் 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு அந்த அணியில் இருந்து வெளியேற விரும்பினார். பின்னர் மினி ஏலத்தில் பங்கேற்க இருந்த அவரை ஏலத்திற்கு முன்னதாகவே ட்ரேடிங் முறையில் தேர்வு செய்ய பல அணிகள் முயன்றன. இறுதியில் சி.எஸ்.கே அணி ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை விட்டுக் கொடுத்து சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் தங்களது அணியில் இணைத்தது.

எம்.எஸ் தோனியை பின்னுக்கு தள்ளிய சஞ்சு சாம்சன் :

அப்படி சென்னை அணிக்குள் வந்த சஞ்சு சாம்சன் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணியின் துவக்க வீரராக களமிறங்கி அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை தான் விளையாடியுள்ள 13 இன்னிங்ஸ்களில் 477 ரன்கள் குவித்துள்ளார். அதோடு இந்த தொடரில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரைசதம் என அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் மே 18-ஆம் தேதியான நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது துவக்க வீரராக விளையாடிய சஞ்சு சாம்சன் 13 பந்துகளை மட்டுமே சந்தித்து 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த இந்த 27 ரன்களின் மூலம் சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றிணையும் முறியடித்துள்ளார்.

அந்த வகையில் சஞ்சு சாம்சன் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரராக மகேந்திர சிங் தோனி முதலிடத்தில் இருந்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 16 இன்னிங்ஸ்களில் விளையாடிய தோனி 461 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவை பின்னுக்கு தள்ளி ஐ.பி.எல் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நிகழ்த்திய – அசத்தல் சாதனை

இவ்வேளையில் நேற்றைய சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 27 ரன்களில் எடுத்ததன் மூலம் சஞ்சு சாம்சன் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் 13 போட்டியில் விளையாடி 477 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் அடித்த சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக முதலிடத்தில் இருந்த தோனியை சஞ்சு சாம்சனை பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement