பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது நேற்று நடைபெற்ற 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 63-வது போட்டியில் சென்னை அணியை வீழ்த்தியதன் மூலம் இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 13 ஆட்டங்களில் 8 வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்து பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
ஹார்டிக் பாண்டியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் :
இன்னும் எஞ்சியுள்ள ஒரு லீக் ஆட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியை சந்தித்தாலும் பிளே ஆப் வாய்ப்பு உறுதி என்பதால் சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகமும் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐ.பி.எல் போட்டிகளில் பாண்டியாவின் மிக முக்கிய சாதனை ஒன்றினையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
அந்த வகையில் பேட் கம்மின்ஸ் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியின் போது 4 ஓவர்களை வீசிய அவர் 28 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த மூன்று விக்கெட்டுகளின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் கேப்டனாக தனது 42-வது விக்கெட்டையும் அவர் வீழ்த்தியிருந்தார்.
ஐ.பி.எல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ஷேன் வார்ன் 57 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஹார்டிக் பாண்டியா 40 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தனர்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் முதல் சி.எஸ்.கே பவுலராக மோசமான சாதனையை நிகழ்த்திய – அன்ஷுல் கம்போஜ்
இவ்வேளையில் நேற்றைய போட்டியில் பேட் கம்மின்ஸ் எடுத்த 3 விக்கெட்டுகள் மூலம் கேப்டனாக ஐ.பி.எல் போட்டிகளில் 42 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் இருந்த ஹார்டிக் பாண்டியாவை பின்னுக்கு தள்ளி தற்போது பேட் கம்மின்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளார். இன்னும் 16 விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் வீழ்த்தும் பட்சத்தில் ஷேன் வார்னையும் பின்னுக்கு தள்ள வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



