சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜ் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் 9 ஆட்டங்களில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால் கடந்த நான்கு போட்டிகளாகவே மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் ஓவருக்கு கிட்டத்தட்ட 15 ரன்கள் விட்டுக் கொடுத்ததோடு மட்டுமின்றி வெறும் 3 வீக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி ஏமாற்றமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
அன்ஷுல் கம்போஜ் நிகழ்த்திய மோசமான சாதனை :
அதிலும் குறிப்பாக நேற்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் அவரது பந்துவீச்சு மிக மோசமாக அமைந்தது சென்னை அணியின் தோல்விக்கு காரணமாகவும் மாறியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற 63-வது லீக் போட்டியில் முதலில் விளையாடிய சி.எஸ்.கே அணி 20 ஓவர்களின் முடிவில் 180 ரன்களை குவித்தது.
பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 19 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக பந்துவீசிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜ் 4 ஓவர்கள் பந்துவீசி 46 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றியிருந்தார்.
அவரது இந்த மோசமான செயல்பாடு சென்னை அணிக்கு பின்னடைவாக மாறியது. அதோடு மட்டுமின்றி ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணி சார்பாக முதல் பந்துவீச்சாளராக ஒரு மோசமான சாதனையையும் நிகழ்த்த காரணமாக மாறியது. அந்த வகையில் நேற்றைய போட்டிக்கு பின்னர் அவர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியை வீழ்த்த என்னோட பிளான் இதுதான்.. என் பேமிலி முன்னாடி அடித்தது ஹேப்பி – இஷான் கிஷன் பேட்டி
இதுவரை ஐ.பி.எல் தொடரின் ஒரு சீசனில் எந்த ஒரு சி.எஸ்.கே பந்துவீச்சாளரும் 30 சிக்ஸர்களை விட்டுக் கொடுக்காத வேளையில் நேற்றைய போட்டியின் முடிவில் அன்ஷுல் கம்போஜ் 30 சிக்ஸர்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதன்மூலம் ஒரு ஐ.பி.எல் சீசனில் 30 சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த முதல் சி.எஸ்.கே பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



