சி.எஸ்.கே அணியை வீழ்த்த என்னோட பிளான் இதுதான்.. என் பேமிலி முன்னாடி அடித்தது ஹேப்பி – இஷான் கிஷன் பேட்டி

Ishan Kishan
- Advertisement -

பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் விளையாடிய சி.எஸ்.கே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்து பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பையும் உறுதி செய்தது. நேற்று வெற்றி பெற்றே ஆக வேண்டிய முக்கிய போட்டியில் விளையாடிய சி.எஸ்.கே அணி தோல்வியை சந்தித்ததன் மூலம் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினமாக மாறியுள்ளது.

சி.எஸ்.கே அணிக்கெதிரான பிளான் குறித்து : இஷான் கிஷன் பேச்சு

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 180 ரன்கள் மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 19 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 47 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 70 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அவரது இந்த அதிரடியான ஆட்டம் காரணமாகவே சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றதால் இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய இஷான் கிஷன் கூறியதாவது : நான் முதலில் இந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்யும் போதே மைதானம் பேட்டிங் செய்ய அவ்வளவு எளிதாக இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எனவே இந்த போட்டியின் போது சேசிங் செய்வது சற்று கடினம் என்பதையும் உணர்ந்தேன்.

இந்த ஆடுகளத்தில் பந்து நின்று வந்ததால் அடிப்பதற்கு ஏதுவாக இல்லை அதேபோன்று சுழப்பந்து வீச்சாளர்களுக்கும் நல்ல உதவி இந்த ஆடுகளத்தில் கிடைத்தது. எனவே மூன்றாவது வீரராக களமிறங்கும் நான் போட்டியின் இறுதிவரை நின்று முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையிலே இந்த போட்டியில் கடைசி வரை நின்று வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விளையாடினேன். ஆனாலும் இறுதியில் ஆட்டமிழந்து விட்டேன்.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியை குஜிலிமஸ்து செய்து சன் ரைசர்ஸ் அணி நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

இந்த போட்டியில் எனது குடும்பம் முதல் முறையாக போட்டியை பார்க்க நேரில் வந்திருந்தார்கள். அவர்களுக்கு எதிராக இப்படி ஒரு ஆட்டத்தை விளையாடியதில் மகிழ்ச்சி. இந்த போட்டியை நான் முடித்துக் கொடுக்க முடியவில்லை என்றாலும் எங்களது அணியின் வீரர்கள் முடித்துக் கொடுத்தனர். இந்த வெற்றி மிகவும் ஸ்பெஷலான ஒன்று என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement