IND vs WI : ஒவ்வொரு தொடருக்கும் ஓப்பனிங் வீரர்களை மாற்றாதீங்க, சாம்சனை நம்புங்க – அணி நிர்வாகத்துக்கு முன்னாள் வீரர் கோரிக்கை

Sanju Samson Deepak Hooda
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஒயிட் வாஷ் செய்து கோப்பையை முத்தமிட்ட இந்தியா தற்போது கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் டி20 தொடரிலும் அசத்தலாக செயல்பட்டு வருகிறது.

Arshdeep Singh IND vs WI

- Advertisement -

முன்னதாக கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவின் தலைமையில் ஆஸ்திரேலியாவில் களமிறங்க காத்திருக்கிறது. அதற்கு முன்பாக தரமான வீரர்களை கண்டறியும் வகையில் நிறைய இளம் வீரர்களுக்கு சுழற்சி முறையில் இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளித்து வருகிறது.

தேவையற்ற சோதனை:
ஆனால் தற்போது அதையே அணி நிர்வாகம் தேவையின்றி அடிக்கடி மாற்றங்களை செய்து அதிகப்படியான சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கருதுகின்றனர். குறிப்பாக இந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சம்பந்தமே இல்லாமல் சூரியகுமார் யாதவ் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது. ஏனெனில் ஐபிஎல் 2022 தொடர் முடிந்ததும் நடந்த தென் ஆப்ரிக்க தொடரில் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இல்லாத நிலைமையில் இஷான் கிசான் – ருதுராஜ் தொடக்க வீரர்களாக களமிறக்கபட்டார்கள்.

அதில் இஷான் கிசான் சிறப்பாக செயல்பட்ட நிலையில் ருத்ராஜ் காயமடைந்ததால் அதன்பின் நடந்த அயர்லாந்து டி20 தொடரில் இதுநாள்வரை மிடில் ஆர்டரில் மட்டுமே விளையாடிய தீபக் ஹூடா ஆச்சரியப்படும் வகையில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். அதில் சதமடித்து அசத்திய அவருடன் நீண்ட நாட்களுக்கு பின் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் தனது முதல் அரை சதத்தை அடித்து 176 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து 77 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

புதுபுது ஜோடிகள்:
அந்த நிலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடரில் ரோகித் சர்மா திரும்பியதும் மிடில் ஆர்டரில் சொதப்பும் ரிஷப் பண்ட்டை தரம் உயர்த்துவதற்காக தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மொத்தத்தில் இஷான் கிசான், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் என அசத்தலாக செயல்பட்ட வீரர்களுக்கு மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பளிக்காத அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டுக்கும் தொடர்ச்சியான வாய்ப்பு கொடுக்காமல் தற்போது சூர்யகுமார் யாதவ் பக்கம் திரும்பியுள்ளது.

Chopra

ஆனால் சோதனை என்ற பெயரில் இப்படி ஒவ்வொரு தொடரிலும் புதுப்புது ஜோடிகளை மாற்றுவதாக தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா இப்படி மாறி மாறி தொடக்க வீரர்களை மாற்றுவதற்குப் பதிலாக சஞ்சு சாம்சனுக்கு நம்பி வாய்ப்பு கொடுக்கலாமே என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கையில்லாமல் செயல்படுவதால் இனிமேல் அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சனும் 2 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி 95 ரன்கள் குவித்தார். அதனால் அடுத்த போட்டியிலும் அந்த இடத்தில் விளையாட அவர் தயாராக இருந்தார். ஆனால் தற்போது சூர்யகுமார் யாதவ் அந்த இடத்தில் விளையாடுவதை பார்த்தால் ஒவ்வொரு நாளும் இந்திய அணி நிர்வாகம் தொடக்க வீரர்களை மாற்றவேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். எனவே அந்த வாய்ப்பிலிருந்து சஞ்சு சாம்சன் கிட்டதட்ட வெளியேறிவிட்டார்” என்று கூறினார்.

அதேபோல் சம்சானுடன் சதமடித்து 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தீபக் ஹூடாவையும் அணி நிர்வாகம் சரியான வகையில் வாய்ப்பளிக்கவில்லை என்று தெரிவித்த அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “ருதுராஜ் காயமடைந்த நிலையில் தீபக் ஹூடா அயர்லாந்து தொடரில் தொடக்க வீரராக களமிறங்கினார். அவரும் தொடக்க வீரராக களமிறங்கலாமே?”

Sanju Samson

“ஆனால் அவருக்கு முதன்மையான 11 பேர் அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க முடியாது என்பதால் கழற்றி விடப்பட்டுள்ளார். இருப்பினும் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்றவர்கள் இல்லாத சமயத்தில் அவர் விளையாட தகுதியானவர். ஆனால் நீங்கள் ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்கள். எனவே ஹூடாவும் இனிமேல் தொடக்க வீரராக வாய்ப்பு பெறப்போவதில்லை” என்று கூறினார்.

Advertisement