இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது போட்டியிலும் ஏமாற்றத்தை சந்தித்த சீனியர் வீரர் – ஏன் இப்படி ?

ind
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இலங்கை கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

IND

- Advertisement -

இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி இனி வரும் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது இலங்கை அணிக்கு எதிராக இன்று தொடங்கியுள்ள இன்றைய இரண்டாவது போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார்.

Samson

கடந்த ஒருநாள் போட்டியின்போது அறிமுகமாகி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தன் காரணமாகவும், இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று உள்ளதன் காரணமாகவும் அதனை மாற்ற கூடாது என்பதற்காகவும் இன்று 2வது போட்டியில் அதே அணியுடன் இந்திய அணி பங்கேற்றுள்ளது.

இதன் காரணமாக சஞ்சு சாம்சன் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் சற்று ஏமாற்றத்தில் தான் இருப்பார்கள். இருப்பினும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டால் நிச்சயம் மூன்றாவது போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement