ஐபிஎல் 2025 ஏலத்தில் ரோஹித் சர்மாவை 50 கோடிக்கு வாங்குவீர்களா? லக்னோ ஓனர் சஞ்சீவ் பேட்டி

Sanjiv Goenka
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்பாக ஏல விதிமுறைகளில் சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல நிறைய அணிகள் தங்களுடைய நட்சத்திர வீரர்களை கழற்றி விடும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அது போன்ற சூழ்நிலையில் மும்பை அணியிலிருந்து ரோஹித் சர்மா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. ஏனெனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த ஐபிஎல் தொடரில் கழற்றி விட்ட மும்பை ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அந்த வரிசையில் 2025 சீசனில் 37 வயதை தொடவிருக்கும் அவரை மும்பை தங்கள் அணியிலிருந்து மொத்தமாக கழற்றி விடவும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

காத்திருக்கும் அணிகள்:

மறுபுறம் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ளார். எனவே டெல்லி, பஞ்சாப் போன்ற இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லாத அணிகள் ரோஹித்தை 50 கோடிகள் கொடுத்து வாங்குவதற்கு தயாராக உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. இந்நிலையில் அதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் ரோஹித் சர்மா ஏலத்திற்கு வருவாரா என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே இதெல்லாம் தேவையற்றது. அவை அனைத்தும் மும்பை இந்தியன்ஸ் அவரை விடுவிக்கிறதா இல்லையா என்பதை பொறுத்ததாகும்”

- Advertisement -

50 கோடிக்கு ரோஹித் சர்மா:

“ஒருவேளை ரோஹித் ஏலத்திற்கு வந்தாலும் உங்களது மொத்த ஏலத் தொகையில் 50% பயன்படுத்தி வாங்கினால் மற்ற வீரர்களை எப்படி வாங்க முடியும். இங்கே அனைவருமே சிறந்த கேப்டன் மற்றும் வீரர்களை வைத்திருக்க விரும்புகின்றனர். ஆனால் கட்டாயம் வாங்க வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. அவை அனைத்தும் உங்களிடம் என்ன இருப்பதை வைத்து உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பொறுத்தது”

இதையும் படிங்க: வேற வழியில்ல.. அந்த விஷயத்தை இந்தியாவை பாத்து காப்பியடிங்க.. பாகிஸ்தானுக்கு பசித் அலி அட்வைஸ்

“அனைத்து அணி நிர்வாகங்களும் இதே எண்ணங்களை கொண்டிருக்கும்” என்று கூறினார். மேலும் கேஎல் ராகுல் தங்களுடைய அணியின் குடும்ப உறுப்பினர் போன்றவர் என்றும் சஞ்சீவ் கோனகா கூறினார். அத்துடன் ராகுலை அடுத்த வருடம் கேப்டனாக தக்க வைப்போமா என்ற விவரங்கள் 2025 ஏல விதிமுறைகள் வந்த பின் முடிவெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement