
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி அழுத்தமான சூழ்நிலைகளிலும் அமைதியாக இருப்பதில் சிறந்தவராக அறியப்படுகிறார். அதனாலேயே அவரை கேப்டன் கூல் தோனி என்று ரசிகர்களும் வல்லுனர்களும் அழைப்பது வழக்கமாகும். முன்னதாக 2016 ஐபிஎல் தொடரில் சென்னை அணி தடை செய்யப்பட்ட போது ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி உருவாக்கப்பட்டது.
அந்த அணிக்கு எம்எஸ் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்த வருடம் தோனி தலைமையில் சுமாராக விளையாடிய புனே லீக் சுற்றுடன் வெளியேறியது. அதன் காரணமாக அடுத்த வருடமே அவரை அதிரடியாக நீக்கிய புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோய்ன்கா ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏனெனில் 3 ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்காக வென்றுக் கொடுத்த தோனி அந்த சமயத்தில் 2 ஐபிஎல் கோப்பைகளையும் வென்றிருந்தார். இருப்பினும் தோனிக்கு பதிலாக கேப்டனாக செயல்பட்ட ஸ்மித் புனே அணியை ஃபைனல் வரை அழைத்து சென்றார். இந்நிலையில் 2017இல் தாம் எடுத்த அதிரடியான முடிவு பற்றி இதுவரை தம்மிடமும் வெளியிலும் ஒரு வார்த்தை கூட தோனி பேசியதில்லை என்று சஞ்சீவ் கோய்ன்கா தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது நீண்ட காலத்திற்கு முன்பு நடைபெற்றது. அப்போது நடந்தது தெளிவான விளக்கத்துடன் நடைபெற்றது. இன்றும் தோனியுடன் மிக நெருக்கமான அன்பான உறவை பகிர்ந்து கொள்கிறேன். முடிவுகள் சரியாக அல்லது தவறாக இருக்கும் என்பதை நேரம் மட்டுமே சொல்லும். நான் ஏன் அந்த முடிவை எடுத்தேன் என்பது கண்ணோட்டமாகவே இருக்கும்”
“ஆனால் அன்று சொன்னதை மீண்டும் சொல்கிறேன். மஹியுடன் ஒவ்வொரு முறையும் சந்தித்து விட்டு வெளியேறும் போதும் அவரிடம் ஏதாவது கற்றுக்கொண்டே செல்கிறேன். அந்த முடிவு நேர்மையானதா இல்லையா என்பது என் எனது இதயத்தில் எனக்குத் தெரியும். அந்த நேர்மையானது என்று எனக்கு நம்பிக்கையளிக்கிறது. யார் என்ன சொன்னாலும் ஒருநாள் உண்மை வெளிவரும்”
இதையும் படிங்க: ஃபிளாட் ட்ராக் புலி.. வெய்ட்டை பாருங்க.. கோலி மாதிரி ரோஹித் அதுக்கு செட்டாக மாட்டாரு.. டேரில் குல்லினன்
“அதை யார் சொல்வார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் எம்.எஸ். தோனி அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை சொல்லவும் மாட்டார். அது தனிப்பட்ட விஷயமாகும். அதையும் தாண்டி தற்போது நாங்கள் இன்னும் நல்ல நட்புறவை கொண்டுள்ளோம்” என்று கூறினார். அப்படி 2017இல் தோனியை கழற்றி விட்டது போலவே தற்போது கேஎல் ராகுலையும் லக்னோ அணி 2025 ஐபிஎல் தொடரிலிருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.