விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அசத்தி வரும் அந்த ஜோடி இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள். அதில் விராட் கோலி 26000க்கும் மேற்பட்ட ரன்கள் 81 சதங்கள் அடித்து பேட்டிங் துறையின் முதுகெலுப்பாக செயல்பட்டு வருகிறார்.
ரோஹித் சர்மாவும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர், 3 இரட்டை சதங்கள், ஒரே உலகக் கோப்பையில் 5 சதங்கள் போன்ற சாதனைகளுடன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் விராட் கோலியை விட ரோஹித் சர்மா சுமாரான ஃபிட்னஸ் கடை பிடிப்பதாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டேரில் குல்லினன் கூறியுள்ளார்.
சுமாரான ரோஹித்:
அதனாலேயே கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்திற்கு வெளியே ரோஹித் சர்மாவால் அசத்த முடிவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் சொந்த மண்ணில் ஃபிளாட்டான பிட்ச்களில் ரோஹித் அதிரடியாக விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இனிமேலும் நீண்ட காலம் அசத்துவதற்கு சரியான வீரர் கிடையாது என்று குல்லினன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்காக 70 டெஸ்ட், 138 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இது பற்றி இன்சைட்ஸ்போர்ட் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவை பார்த்து விட்டு விராட் கோலியையும் பாருங்கள். அவர்கள் இருவருடைய உடல் நிலையில் உள்ள வித்தியாசங்கள் தெரியும். கொஞ்சம் அதிகப்படியான உடல் எடையை கொண்டுள்ள ரோஹித் இனிமேலும் நீண்ட கால கிரிக்கெட்டர் கிடையாது”
செட்டாக மாட்டாரு:
“4 அல்லது 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடும் அளவுக்கு ரோஹித் சர்மாவிடம் நல்ல உடல் தகுதி இல்லை. அதை நான் மீண்டும் சொல்வேன். ரோஹித் சொந்த மண்ணில் அசத்தக்கூடியவர். இப்படி சொல்வது இந்தியாவுக்கு சாதகமாக மாறுமா என்பது தெரியாது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர்கள் அதே அணியாக செயல்படவில்லை”
இதையும் படிங்க: அறிமுகமாகி 4 வருஷம் ஆச்சு.. 30 டெஸ்ட் மேட்ச் ஆடியாச்சி.. ஆனாலும் சுப்மன் கில்லை – தொடரும் சோகம்
“ரோஹித் ஃபிளாட்டான பிட்ச்களில் அசத்தக்கூடியவர். இந்தியாவுக்கு வெளியே அவருடைய ரெக்கார்டை பாருங்கள். குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் அவர் ஒவ்வொரு முறையும் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக நன்றாக விளையாடவில்லை. தற்போது மிடில் ஆர்டரிலும் அசத்தவில்லை. எனவே அவர் துவக்க வீரராக வந்து அணியை முன்னின்று வழி நடத்த வேண்டும்” என்று கூறினார்



