அறிமுகமாகி 4 வருஷம் ஆச்சு.. 30 டெஸ்ட் மேட்ச் ஆடியாச்சி.. ஆனாலும் சுப்மன் கில்லை – தொடரும் சோகம்

Gill
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர இளம் ஆட்டக்காரரான சுப்மன் கில் 18 வயது உட்பட்டோர் இந்திய அணியில் இடம் பிடித்து அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். அதன் காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், அதற்கு அடுத்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும், 2023-ல் டி20 என மூன்று வகையான இந்திய அணியிலும் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

சுப்மன் கில்லினை தொடரும் சோகம் :

அதோடு இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் உயர்ந்திருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவர் நடைபெற்று முடிந்த அடிலெய்டு டெஸ்ட் வரை 30 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

இப்படி 30 டெஸ்டில் விளையாடியுள்ள அவர் 36.5 ரன்கள் சராசரியுடன் 5 சதம் மற்றும் 7 அரைசதத்துடன் 1859 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் புஜாராவின் இடத்தில் விளையாடி வருபவர் என்பதால் அவரை போன்றே மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.

ஆனால் தனக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தாலும் எளிதாக விக்கெட்டுகளை சுப்மன் கில் தொடர்ச்சியாக இழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் இடம்பெறாத அவர் இரண்டாவது போட்டியின் போது இந்திய அணிக்காக விளையாடி இருந்தாலும் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே நல்ல துவக்கம் கிடைத்தும் 31 மற்றும் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிறினார்.

- Advertisement -

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் 30 போட்டிகளில் விளையாடியும் அவர் இதுவரை ஒருமுறை கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டநாயகன் விருதினை வென்றதில்லை என்பது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகச்சிறந்த வீரராக பார்க்கப்படும் சுப்மன் கில் ஒருநாள் மற்றும் டி20, ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அவர் ஆட்டநாயகன் விருது வாங்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய மண்ணில் கவாஸ்கருக்கு அடுத்து மாபெரும் சாதனையை நிகழ்த்த விராட் கோலிக்கு – காத்திருக்கும் வாய்ப்பு

அதிலும் குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சார்பில் அதிக போட்டிகளில் விளையாடி ஒருமுறை கூட ஆட்டநாயகன் விருதை வெல்லாத வீரர்களின் படியலில் நான்காவது இடத்தை சுப்மன் கில் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement