- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெறும் 34% ஆடும் பும்ரா.. நாட்டுக்காக ஆஸியில் இதை கூட செய்யலன்னா எப்படி? சஞ்சய் மஞ்ரேக்கர் அறிவுரை

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பும்ரா தலைமையில் அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது போட்டியில் சுமாராக விளையாடிய இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல அடுத்த போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா லேசான காயத்தை சந்தித்தார். இருப்பினும் அதற்கு முதல் உதவிகளை எடுத்துக் கொண்ட அவர் தொடர்ந்து பந்து வீசினார். அதனால் அவருடைய பணிச் சுமையை கண்காணிப்பது மிகவும் முக்கியம் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.

- Advertisement -

வெறும் 34% போட்டிகள்:

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த 3 வருடத்தில் இந்தியா விளையாடிய போட்டிகளில் வெறும் 34% மட்டுமே விளையாடியுள்ளதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். மற்ற 74% போட்டிகளில் அவருக்கு பிசிசிஐ தாமாக முன்வந்து ஓய்வு கொடுத்ததாக மஞ்ரேக்கர் கூறியுள்ளார். எனவே இந்தத் முக்கியமான தொடரில் பணிச்சுமைகளை பார்க்காமல் நாட்டுக்காக பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “நான் அவரை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட வைப்பேன். ஏனெனில் இந்திய அணி நிர்வாகம் பும்ராவை அந்தளவுக்கு கவனித்துக் கொள்கிறது. கடந்த 3 வருடங்களில் இந்தியா விளையாடிய சர்வதேச போட்டிகளில் 34% மட்டுமே ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடியுள்ளார். இதை நான் ஏற்கனவே ஒருமுறை தெரிவித்துள்ளேன்”

- Advertisement -

நாட்டுக்காக விளையாடுங்க:

“3 வருடங்களில் 34% மட்டுமே விளையாடியுள்ள அவர் போதுமான அளவுக்கு ஓய்வு பெற்றுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் இந்த முக்கியமான தொடரில் அவர் உங்களுக்கு தேவை. ஏனெனில் இந்தத் தொடரில் வெற்றி பெற்றால் அது நீண்ட காலம் நினைவில் வைத்துக்கொள்ளப்படும். இந்த தொடரில் அவரை முழுமையாக விளையாட வையுங்கள். அதற்கு பதிலாக ஏதேனும் ஒரு சாதாரண இரு தரப்பு தொடரில் அவருக்கு ஓய்வு கொடுங்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: டாப் 4ல விராட் கோலி கைல தான் அது இருக்கு.. 1 வெற்றியால் பும்ராவை இப்போவே தள்ளாதீங்க.. கபில் தேவ்

அவர் கூறுவது போல பார்டர் – கவாஸ்கர் கோப்பை 2 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும் கௌரவமிக்க தொடராகும். தற்போது இந்திய அணி பின்னடைவை சந்திக்கும் சூழ்நிலையில் இருக்கிறது. எனவே இந்தத் தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா முழுமையாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தால் அது 2024 டி20 உலகக் கோப்பை போல நீண்ட காலம் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -