அவங்கள நம்பி ஏமாந்தது போதும் சாமி, அந்த 6 இடத்துக்கு இளம் வீரர்களை போடுங்க – சஞ்சய் மஞ்ரேக்கர் கோரிக்கை

Sanjay
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்து வெறும் கையுடன் நாடு திரும்பியது. இத்தனைக்கும் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்ட இந்தியா பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் கொஞ்சம் கூட போராடாமல் சொதப்பி தோல்வியை சந்தித்ததால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்திலிருந்து என்ன பயன் என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

TEam India Rohit Sharma

- Advertisement -

அந்த போட்டியில் ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு முழுமையாக தயாராமல் ஃபைனலில் களமிறங்கியது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் அதை விட நவீன கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார்கள் என சமூக வலைதளங்கள் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா, புஜாரா ஆகியோரில் ஒருவர் கூட அரை சதமடிக்காதது தோல்விக்கு முதன்மை காரணமாக அமைந்தது.

மஞ்ரேக்கர் கோரிக்கை:
இது மட்டுமல்லாமல் 2019 உலகக்கோப்பை, 2021 டி20 உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், 2022 டி20 உலக கோப்பை என சமீப காலங்களாகவே நட்சத்திர அந்தஸ்து கொண்ட ரோகித் சர்மா போன்ற வீரர்கள் சுமாராக செயல்படுவது இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது. அதனால் காத்திருந்து காத்திருந்து ஏமாந்தது போதும் இந்த சீனியர்களை கழற்றி விட்டு இந்திய அணிக்குள் இளம் ரத்தத்தை பார்க்க வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

சொல்லப்போனால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் அந்த வேலையை துவக்கியுள்ள பிசிசிஐ அடுத்த நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணியிலும் மாற்றத்தை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் 3 பேட்ஸ்மேன்களும் 3 வேகப்பந்து வீச்சாளர்களும் புதிதாக சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் அவர்களை ஐபிஎல் தொடரில் அல்லாமல் உள்ளூர் தொடரிலிருந்து தேர்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஃபைனலில் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த ஸ்டீவ் ஸ்மித் – டிராவிஸ் ஹெட் ஆகியோர் பெரும்பாலும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. எனவே நாம் ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அட்ஜஸ்ட் செய்வது போன்ற வீரர்கள் அல்லாதவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக உள்ளூர் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அடிக்கும் ரன்களை மட்டும் பார்க்காமல் வெளிநாட்டுப் போட்டிகளில் அசத்தும் திறமையுடையவர்களாக இருக்கிறார்களா என்று தேர்வு குழுவினர் கவனித்து தேர்வு செய்ய வேண்டும்”

Sanjay

“எனவே நான் இந்திய கிரிக்கெட் அணிக்குள் குறைந்தது 3 புதிய பேட்ஸ்மேன்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களை பார்க்க விரும்புகிறேன். குறிப்பாக உள்ளூர் கிரிக்கெட்டில் ரன்களை மட்டும் பார்க்காமல் திறமையை பார்த்து பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில் நமக்கு 3, 4, 5 ஆகிய இடங்களில் ஓரளவு சிறப்பான தடுப்பாட்ட டெக்னிக் கொண்ட பேட்ஸ்மேன்கள் உள்ள தொடர்களிலேயே நமக்கு கிடைப்பார்கள். குறிப்பாக ரன்களுக்கு ஆர்வம் மற்றும் பசியுடன் விளையாடும் வீரர்களை பார்க்க வேண்டும். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நம்முடைய வேகப்பந்து வீச்சுத் துறையின் ஆழத்தை நினைத்து நான் மிகவும் பெருமையாக இருந்தேன்”

இதையும் படிங்க:தோனியுடனான சண்டையில் ரவீந்திர ஜடேஜா கர்மா ட்வீட் போட்டாரா? சிஎஸ்கே இயக்குனர் காசி விஸ்வநாதன் பேட்டி

“ஆனால் திடீரென பும்ரா இல்லாததும் அது சரிந்து விட்டது. எனவே பிரசித் கிருஷ்ணா போன்ற புதிய பவுலர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு தேவைப்படுகிறார்கள். குறிப்பாக ஒருவர் காயமடைந்தால் நீங்கள் ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் போல தரமான பேக் அப் பவுலரை தயாராக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் ஹேசல்வுட்க்கு பதிலாக வாய்ப்பு பெற்றதும் நேரடியாக ஃபைனலில் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் இந்தியாவோ உமேஷ் யாதவ் போன்றவரை சார்ந்திருக்க வேண்டிய நிலைமையில் இருப்பது வருங்காலத்திற்கு நல்லதல்ல” என்று கூறினார்.

Advertisement