தோனியுடனான சண்டையில் ரவீந்திர ஜடேஜா கர்மா ட்வீட் போட்டாரா? சிஎஸ்கே இயக்குனர் காசி விஸ்வநாதன் பேட்டி

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற 2023 ஐபிஎல் டி20 தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற தன்னுடைய பரம எதிரி மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. முன்னதாக 41 வயதை கடந்து விட்ட தோனி வருங்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த வருடம் கேப்டன்ஷிப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து உதவியாக விளையாடும் முடிவை எடுத்தார். ஆனால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டனாக செயல்பட்ட அனுபவமில்லாத அழுத்தத்தால் தடுமாறிய ஜடேஜா தலைமையில் ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை புள்ளி பட்டியல் 9வது இடத்தை மட்டுமே பிடித்தது.

அத்துடன் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் மொத்தமாக சொதப்பிய ஜடேஜா கேப்டன்ஷிப் பொறுப்பை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்து காயமடைந்து பாதியில் வெளியேறினார். அப்போது கேப்டன்ஷிப் விஷயத்தில் தோனியுடன் விரிசல் ஏற்பட்டதாக வெளிவந்த செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னைக்காக விளையாடிய புகைப்படங்களை அனைத்தையும் ஜடேஜா டெலிட் செய்தது அந்த அணி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

- Advertisement -

கர்மா ட்வீட்:
இருப்பினும் தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் ஆகியோர் ஜடேஜாவிடம் பேசி தவறான புரிதல்களை சரி செய்ததால் இந்த சீசனில் விளையாடிய ஜடேஜா ஆரம்ப முதலே பேட்டிங்கில் 7வது இடத்தில் களமிறங்கி தடுமாறினார். மறுபுறம் முழங்கால் வலியால் தவித்த தோனி 8வது இடத்தில் விளையாடியதுடன் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று பார்த்ததால் பெரும்பாலான ரசிகர்கள் ஜடேஜாவை அவுட்டாகுமாறு வெளிப்படையாகவே கேட்டனர்.

அதனால் வேதனையில் ஆழ்ந்த ஜடேஜா கர்மா பொறுமையாக செயல்பட்டாலும் நிச்சயம் அதன் வேலையை செய்யும் என்று ட்விட்டரில் பதிவிட்டதால் மீண்டும் தோனியுடன் சண்டையா என ரசிகர்கள் குழப்பமடைந்தனர். அந்த நிலையில் மாபெரும் ஃபைனலில் கடைசி நேரத்தில் தோனி டக் அவுட்டானாலும் மோகித் சர்மா பேசிய கடைசி ஓவரில் தில்லாக பேட்டிங் செய்த ரவிந்திர ஜடேஜா சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

அந்த வகையில் அதுவரை தோனிக்காக அவுட்டாகுமாறு கேட்ட ஜடேஜா தான் கடைசியில் சென்னையை வெற்றி பெற வைத்தது அந்த அணி ரசிகர்களை மிகவும் வருந்த வைத்தது. இருக்கணும் போட்டியின் முடிவில் ஜடேஜாவை தம்முடைய இடுப்பில் தூக்கி தோனி கொண்டாடியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்து இருவருக்கும் எந்த சண்டையும் இல்லை என்பதை நிரூபித்தது. இந்நிலையில் ரசிகர்கள் அவ்வாறு நடந்து கொண்டதற்காக வேண்டுமானால் ஜடேஜா அப்படி ட்வீட் போட்டிருக்கலாம் என்று தெரிவிக்கும் சென்னை அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தோனியுடன் எந்த சண்டையும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜடேஜாவை பொறுத்த வரை மிகவும் சிறப்பாகப் பந்து வீசினார். அதே போல பேட்டிங் வரிசையில் ருதுராஜ், ரகானே, கான்வே, மொய்ன் அலி ஆகியோர் மேலே விளையாடியதால் ஜடேஜா வந்த போதெல்லாம் 10 – 15 பந்துகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை மட்டுமே இருந்தது. அது போன்ற சமயங்களில் அனைத்து நேரமும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. மேலும் தமக்கு அடுத்தபடியாக தோனி வருவார் என்பது அவருக்கு நன்றாக தெரியும். ஆனால் அந்த சமயங்களில் ரசிகர்கள் தோனியை தான் வரவேற்க காத்திருக்கின்றனர்”

- Advertisement -

“அதன் காரணமாக ஒருவேளை அவர் மனமுடைந்திருக்கலாம். ஏனெனில் அது போன்ற விளையாடும் எந்த வீரராக இருந்தாலும் அழுத்தத்தை சந்திப்பார்கள். ஆனாலும் அதற்காக எங்களிடம் எந்த புகார் செய்யாத ஜடேஜா ஒருவேளை அதனால் அந்த ட்வீட் போட்டிருக்கலாம். இவை அனைத்தும் விளையாட்டின் ஒரு அங்கமாகும். மேலும் கடைசி கட்ட போட்டிகளில் நான் ஜடேஜாவை சமாதானப்படுத்துவதை போன்ற வீடியோக்கள் வலம் வந்தாலும் அது நீங்கள் நினைக்கும் அர்த்தத்தை கொண்டிருக்கவில்லை”

இதையும் படிங்க:வீடியோ : கில்லி விஜய் போல மொத்தமாக மாறிய எழும்பை நொடியில் மாற்றி மீண்டும் பந்து வீசிய வீரர் – காயத்தை வீழ்த்திய மாஸ் தருணம்

“எங்களது அணிக்குள் என்ன நடக்கிறது என்பதை வெளியே யாருக்கும் தெரியாது. அதே சமயம் எங்களது அணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதுடன் தோனி மீது அவர் மிகுந்த மரியாதை வைத்துள்ளார். குறிப்பாக ஃபைனலில் விளையாடிய அந்த இன்னிங்ஸ் தோனிக்கு அர்ப்பணிக்கிறேன் என்று அவர் சொன்னதே அதற்கு சாட்சியாகும்” என்று கூறினார்.

Advertisement