இவ்ளோ பெரிய வீரரையா அணியிலிருந்து நீக்குவீங்க. இவரை அணியில் இருந்து நீக்கி தப்பு பண்ணிடீங்க – மஞ்சரேக்கர் ஆவேசம்

Sanjay

நடப்பு ஐபிஎல் தொடரின் 28-வது லீக் போட்டியானது நேற்று, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு முன்பாக அதுவரை ஐதராபாத் அணியை வழிநடத்தி வந்த டேவிட் வார்னரை கேப்டன் பதவியில் இருந்து தூக்கிய அந்த அணி நிர்வாகம், அப்பொறுப்பை கேன் வில்லியம்சனிடம் ஒப்படைத்திருந்தது. ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் நேற்றைய போட்டியில் டேவிட் வார்னரை அணியிலிருந்தே தூக்கி இருந்தார் கேன் வில்லியம்சன்.

srhvsrr

இப்போட்டியில் டாஸ் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான பட்லர் 64 பந்துகளில் 124 ரன்களை எடுத்து, ஐபிஎல் தொடர்களில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பின்பு 2-வது இன்னிங்சை தொடங்கிய ஹைதராபாத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 55 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இப்போட்டி முடிந்ததும் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர், டேவிட் வார்னரை அணியில் சேர்க்காதது குறித்து கருத்து தெரிவித்தார். அப்பேட்டியில் பேசிய அவர், என்னுடைய கண்ணோட்டத்தில், ஐதராபாத் அணி நிர்வாகம் ஜேசன் ஹோல்டர் அல்லது முஜீப்புர் ரஹ்மானை அணிக்குள் விளையாட வைக்கும் விருப்பத்துடன் இருந்திருக்கலாம். அதனால் தான் டேவிட் வார்னருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கருதுகிறேன்.

Nabi

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக முஹம்மது நபியை விளையாட வைத்திருக்கிறார்கள். இனிவரும் போட்டிகளில் டேவிட் வார்னருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கருதுகிறேன். ஒருவேளை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் போனால், அப்போது நாம் உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார். நேற்றைய போட்டியில் டேவிட் வார்னருக்கு, விளையாடும் அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவருக்கு பதிலாக அணியில் இடம் பிடித்த முகமது நபியை, எதற்காக அணிக்குள் கொண்டு வந்தார்கள் என்றும் எவருக்கும் தெரியவில்லை.

- Advertisement -

நேற்றைய போட்டியில் அந்த அணியில் சேர்க்கப்பட்ட முகமது நபி ஒரு ஓவர் மட்டுமே வீசி 21 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். மேலும் இரண்டாவது இன்னிங்சில் 221 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்யும்போது டேவிட் வார்னர் போன்ற அதிரடியான துவக்க ஆட்டக்காரர் இல்லாமல் போனது அந்த அணிக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இதற்கிடையில் டேவிட் வார்னருக்கும், ஹைதராபாத் அணி நிர்வாகத்திற்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்பதால்தான், அவரை வேண்டுமென்றே அணியிலிருந்து ஓரம் கட்டி உள்ளனர் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

warner 1

2014 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட டேவிட் வார்னர், அந்த ஆண்டிலிருந்தே தான் விளையாடிய ஒவ்வொரு சீசனிலும் அந்த அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2015, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஆரஞ்சு கேப் ஹோல்டரும் அவர்தான். அவருடைய கேப்டன்சியின் கீழ் 2016ம் ஆண்டு ஐதராபாத் அணி ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றியது என்பதும் நினைவுக்கூற வேண்டிய ஒன்றாகும்.