தோனி செய்த இந்த நல்ல காரியத்தால் தான் கோலி இன்னைக்கு இப்படி இருக்காரு – சஞ்சய் மஞ்சரேக்கர் வெளிப்படை

Sanjay
- Advertisement -

ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதில் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரில் இந்திய அணியும் தொடரை கைப்பற்றியது. மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டி வருகின்ற 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டுமென்று தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 2 அரைசதம் அடித்து 173 ரன்களும், டி20 போட்டியில் 134 ரன்களை குவித்துள்ளார். இவ்வாறு சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்புவதாக கூறியுள்ளார். கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா தற்போது கர்ப்பமாக இருப்பதால், இந்த எதிர்பாராத முடிவை எடுத்துள்ளார்.

இந்நிலையில் சர்ச்சை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விராட் கோலி குறித்து சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறுகையில் “கோலி என்றாலே அவரது பேட்டிங் தான். அவரது பேட்டிங் ஸ்டைல் பார்ப்பதற்கே இனிமையாக இருக்கும். எவ்வாறு ரன்கள் குவிப்பது என்ற வித்தையை அறிந்தவர். 2011-2012 இல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது கோலி சதம் அடித்தார்.

kohli dhoni

அந்த ஆண்டு கோலியை தவிர வேறு எந்த வீரரும் சதம் அடிக்கவில்லை. அப்போது கோலி இந்திய அணியின் இளம் வீரர். சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியில் இருந்து கோலி நீக்கப்படும் நிலைமையில் இருந்தார். அப்போது கேப்டனாக இருந்த தோனி தான் கோலியை அணியிலிருந்து நீக்கி விடாமல் காப்பாற்றினார். கோலியின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கினார்.

virat kohli

அதன்பின் நடைபெற்ற பெரத் டெஸ்ட் போட்டியில் கோலி 70 ரன்கள் குவிக்க, அதற்கடுத்து போட்டியில் மீண்டும் சதம் அடித்தார். தோனி கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விராட் கோலியை தன்னை நிரூபித்தார். தற்போது கோலி இந்திய அணியின் சிறந்த கேப்டனாக உருவெடுத்துள்ளார்” என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

Advertisement