இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இடத்தில் இவர் விளையாட வேண்டும் – சஞ்சய் மஞ்சரேக்கர் விருப்பம்

Sanjay
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்கிய நடைபெற்று வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி படு மோசமாக தோற்றுவிட்டது. குறிப்பாக இந்த இரண்டு போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் பெரிதாக ஏதும் செய்யவில்லை. இதுதான் உண்மை இரண்டு போட்டிகளில் மேலே ஆஸ்திரேலிய அணி 350 ரன்களுக்கு மேல் குவித்து விட்டது. ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணி பந்துவீச்சாளர்களை கத்துக்குட்டி அணியில் பவுலர்களை போல அடித்து நொறுக்குகின்றனர்.

indvsaus

- Advertisement -

இந்திய அணியில் முன்னணி பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, சாஹல் ஆகியோரது பந்துவீச்சுகள் இந்த தொடரில் எடுபடவில்லை. அதுமட்டுமின்றி நவதீப் சைனி போன்ற திறமையான இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் போதும் கூட இதுதான் நடந்திருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு பேச்சுக்கள் இருந்துகொண்டிருந்தது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் மேலும் ஒரு பந்து வீச்சாளர் அணிக்கு தேவை என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் அணியில் ஒரு புதிய பந்து வீச்சாளரை சேர்க்க வேண்டும் என்று பிரபல சர்ச்சை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார். அதிலும் வித்தியாசமாக இம்முறை மும்பை அணியின் வீரர்களை ஆதரிக்காமல் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சஹர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Chahar-1

இதுகுறித்து ரசிகர் ஒருவர் பதிவிட்ட கருத்தில் இந்திய அணி தொடர்ந்து 6 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தோற்றுவிட்டது. பந்தை ஸ்விங் செய்யும் திறமையான பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை. புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை என்பதால் அந்த இடத்திற்கு தீபக் சாஹர் மிகப்பொருத்தமாக இருப்பார். தேர்வுக்குழுவினர் அடுத்த ஒருநாள் போட்டியில் அவரை சேர்க்க வேண்டும் என்று அந்த ரசிகர் ட்வீட் செய்திருந்தார்.

chahar

இதனை பார்த்த சர்ச்சை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 100% ஒத்துக்கொள்கிறேன். தீபக் சாஹர் அணியில் இருக்க வேண்டும். அது பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோருக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். புவனேஸ்வர் இல்லாத நேரத்தில் தீபக் சாஹர் இருப்பது இந்திய அணிக்கு மிகப் பெரும் பலத்தை கொடுக்கும் என்று ட்வீட் செய்திருந்தார். புதிய பந்தில் அதிக ஸ்விங் செய்யும் தீபக் சாகர் பவர்பிளே ஓவர்களில் பந்துவீசுவதில் வல்லவர் அவர் இந்திய அணியின் டி20 அணியில் மட்டும் இடம்பிடித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement