இவரை டீம்ல வச்சிருக்கிறதே வேஸ்ட். மீண்டும் தமிழக வீரரை சீண்டிய – சஞ்சய் மஞ்சரேக்கர்

Sanjay
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த முக்கியமான இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை டெல்லி அணி இருமுறை தவறவிட்டது. அதாவது முதலாவது குவாலிபயர் போட்டியில் சென்னை அணியிடமும், இரண்டாவது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியிடமும் டெல்லி அணி தோல்வியடைந்து வெளியேறியது.

dhoni

- Advertisement -

லீக் சுற்றுகளின் முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தியிருந்த வேளையில் பிளே ஆப் சுற்று போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை பெற்று இந்த தொடரில் இருந்து வெளியேறியது டெல்லி அணிக்கு மிக மோசமான விடயமாக மாறியது. குறிப்பாக கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 135 ரன்கள் மட்டுமே குவித்தது.

இவ்வளவு குறைவான ரன்கள் அடித்தது அவர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியை இறுதிவரை டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்திக் கொண்டு சென்றனர். இந்நிலையில் இந்த போட்டியின் 20 ஆவது கடைசி ஓவரை அஷ்வின் வீசியது தான் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளத்தின் மூலமாக விமர்சித்து வருகின்றனர்.

ashwin

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டெல்லி அணி பெற்ற இந்த தோல்வி குறித்து கூறுகையில் தமிழக வீரர் ஒருவரை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் மட்டுமல்ல அஷ்வின் கடந்த 5 ஆண்டுகளாகவே ஒரே மாதிரியாகத்தான் பந்து வீசுகிறார். டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பான வீரர் தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் டி20 போட்டிகளில் பொறுத்தவரை அவர் வேலைக்கு ஆகமாட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும்வரை இவரே இந்திய அணியின் கோச் – பி.சி.சி.ஐ தரப்பில் வெளியான தகவல்

அஷ்வின் பந்துவீச்சில் முன்னேற்றங்களும், மாற்றங்களும் தேவை. என்னைப் பொறுத்தவரை தற்போதுள்ள டி20 போட்டிகளில் மைதானத்துக்கு ஏற்றார்போல் செயல்படுபவர்களாக சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, சாஹல் போன்றவர்களே சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். எனவே அஷ்வின் டெல்லி அணியில் இருப்பது வேஸ்ட் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement