புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும்வரை இவரே இந்திய அணியின் கோச் – பி.சி.சி.ஐ தரப்பில் வெளியான தகவல்

IND
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரியின் பதவி காலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க விரும்பவில்லை என்று ரவிசாஸ்திரி கூறியதன் காரணமாக புதிய பயிற்சியாளரை தேடும் பணியினை தற்போது பிசிசிஐ தீவிரப்படுத்தியுள்ளது.

Shastri

- Advertisement -

அதன்படி இந்திய அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர்களில் ஒருவரே இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என பிசிசிஐ-யின் தலைவர் கங்குலி விருப்பப்படுவதால் நிச்சயம் இந்திய அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர்களில் ஒருவரே பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் நவம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு உலக கோப்பை தொடர் முடிவடைந்த பின்னர் உடனடியாக அடுத்து இந்திய அணி இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான பயிற்சியாளராக யார் செயல்படுவார்கள் ? என்ற கேள்வி தற்போது அதிக அளவில் எழுந்துள்ளது. அதன்படி உலக கோப்பை தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்ட டிராவிட் புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படும் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பார் என்று ஒரு தகவல் பிசிசிஐ சார்பில் சார்பில் தெரிய வந்துள்ளது.

Dravid

மேலும் இது குறித்து பேசிய பிசிசிஐ நிர்வாகி கூறுகையில் : புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி யார் ? யார் ? விண்ணப்பிப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியாது என்றும் அதுவரை இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியை வீழ்த்த இறுதிப்போட்டியில் வீழ்த்த முக்கிய வீரரை அணியில் எடுக்கும் – கொல்கத்தா அணி

மேலும் முன்கூட்டியே யார் பயிற்சியாளர் என்பதை தேர்வு செய்ய முடியாது என்கிற காரணத்தினால் இடைக்கால பயிற்சியாளர் இந்திய அணிக்கு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement