சி.எஸ்.கே அணியை வீழ்த்த இறுதிப்போட்டியில் வீழ்த்த முக்கிய வீரரை அணியில் எடுக்கும் – கொல்கத்தா அணி

KKRvsCSK

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு 14-வது ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேவேளையில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்த டெல்லி அணி மீண்டும் ஒருமுறை கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் தோல்வி அடைந்து மீண்டும் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை டெல்லி அணி இழந்தது.

tripathi

அதேவேளையில் டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா அணி தற்போது இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோத இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்திவரும் சென்னை அணியானது நிச்சயம் இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதேவேளையில் இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் மோசமாக செயல்பட்டுவந்த கொல்கத்தா அணியானது இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளது. இதன் காரணமாக நிச்சயம் அவர்கள் கோப்பையையும் கைப்பற்ற ஆயத்தமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேவேளையில் கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களும் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

narine

குறிப்பாக சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும், ஷிவம் மாவி மற்றும் பெர்குசன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் கனகச்சிதமாக பந்து வீசி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை அணியை வீழ்த்துவதற்காக இறுதிப் போட்டியில் முன்னணி வீரர் ஒருவர் அணியில் இடம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

russell

அதன்படி காயம் காரணமாக விளையாடாமல் இருக்கும் ரசல் மீண்டும் இறுதிப்போட்டியில் ஷாகிப்புக்கு பதிலாக விளையாடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலை கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளரான டேவிட் ஹஸ்ஸியும் உறுதிப்படுத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் ரசல் விளையாட வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக இறுதிப்போட்டியில் ரசல் அணியில் இணையும் பட்சத்தில் கொல்கத்தா அணி மேலும் வலுப்பெறவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement