அப்படில்லாம் சான்ஸ் கிடைக்காது.. ரோஹித் – விராட் அதை நிரூப்பிச்சு காட்டனும்.. சஞ்சய் மஞ்ரேக்கர் அதிரடி

Sanjay Manjrekar 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடியது. அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 ஒருநாள் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாட உள்ளனர்.

அதனால் 2024 டி20 உலகக் கோப்பையில் அவர்கள் விளையாடுவார்களா என்ற கேள்வி காணப்படுகிறது. ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு விராட் கோலியை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா, அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

ஈஸியா கிடைக்காது:
அதனால் காலம் கடந்த சீனியர் வீரர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையில் இளம் அணியை களமிறங்குவதற்கான வேலைகளை பிசிசிஐ செய்து வருகிறது. அதற்கேற்றார் போல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக ஒரு டி20 போட்டியில் கூட விளையாடாமல் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு இளம் வீரர்களை விட தாங்கள் தகுதியானவர்கள் என்பதை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா நிரூபித்த பின்பே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “வாழ்க்கையில் அடுத்ததாக என்ன இருக்கிறது என்பதை யார் அறிவார்? நாளை என்ன நடைபெறும் என்பது எனக்கு தெரியாது”

- Advertisement -

“நம்முடைய அணுகுமுறை மிகவும் எளிதாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் நாம் நிறைய உலகக் கோப்பைகளில் விளையாடியும் அதில் வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில் நாம் சற்று சுமாரான வித்தியாசமான கிரிக்கெட்டை விளையாடுகிறோம். சில அம்சங்கள் உங்கள் கை மீறி சென்றால் அதை எளிதாக்க முயற்சியுங்கள்”

இதையும் படிங்க: சவாலான பிட்ச்சில் ஆட்டிப்பார்த்த ஆஸி.. போராடி திருப்பி அடித்த இந்தியா.. வெல்லப்போவது யார்?

“உலகக்கோப்பை அருகில் வரும் போது ஃபார்மில் உள்ள வீரர்களை தேர்வு செய்யுங்கள். இது போன்ற நிலைமையில் விராட் கோலி தற்போதுள்ள இளம் வீரர்களை விட தாம் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை காட்ட வேண்டும். அதே போல ஹர்திக் பாண்டியாவை விட ரோகித் சர்மா தான் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சிறந்தவர் என்பதை காட்ட வேண்டும்” என்று கூறினார். இருப்பினும் 2023 உலகக் கோப்பையில் விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் தான் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement