சச்சின் மாதிரியே விராட் கோலி அதை செய்ய விரும்ப மாட்டாரு.. ஆனா சச்சினின் அந்த சாதனை உடைப்பது ரொம்ப கஷ்டம்.. மஞ்ரேக்கர் பேட்டி

Sanjay Manjrekar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவுக்கு கடந்த தலைமுறையில் சச்சின் டெண்டுல்கர் மகத்தான செயல்பாடுகளை வெளிப்படுத்தி 30000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து 100 சதங்கள் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அவரது வரிசையில் தற்போதைய தலைமுறையில் அசத்தும் விராட் கோலி 34 வயதிலேயே 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 77 சதங்களையும் அடித்து நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இந்தியாவின் நாயகனாக செயல்பட்டு வருகிறார்.

அதிலும் சச்சின் அடித்த ரன்களை வேகமாக எடுத்து வரும் அவர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். அத்துடன் இப்போதே 47 சதங்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை உடைப்பதற்கு 100% பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சச்சினுக்கு நிகரான வீரராக விராட் கோலி கிடைத்துள்ளது இந்திய கிரிக்கெட்டுக்கு மகிழ்ச்சியான அம்சமாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

சச்சின் பாதையில்:
இந்நிலையில் ஆசிய கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஓய்வெடுத்த போது தாம் சீனியர் கிரிக்கெட் வீரர் என்பதை பார்க்காமல் ஆர்வத்துடன் கூல்டிரிங்ஸ் தூக்கிய விராட் கோலி ஜாம்பவான் சச்சின் போலவே அணியில் அதிகாரம் செய்வதை விரும்பாதவராக இருப்பதாக சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார். அதே சமயம் சச்சினின் இதர சாதனைகளை எளிதாக உடைத்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்துள்ள 51 சதங்களை விராட் கோலியால் எளிதில் முறியடிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்தது பின்வருமாறு. “கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுவதை விரும்புவதே சச்சின் மற்றும் விராட் கோலிக்கு இடையேயான முக்கிய ஒற்றுமையாகும். குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் இடம்பெறவில்லை. ஆனாலும் களத்திற்கு மகிழ்ச்சியுடன் வந்த விராட் கோலி எப்போதுமே பவர் அல்லது தலைமையை விரும்புபவராக இருக்கிறார் என்று எனக்கு தோன்றவில்லை.”

- Advertisement -

“மாறாக அவர் எப்போதும் அணியின் ஒரு அங்கமாக இருந்து மகிழ்ச்சியுடன் விளையாடுவதை விரும்புகிறார். மேலும் கேப்டனாகவும் நீண்ட காலமாக இருந்த அவரிடம் நிறைவேறாத கனவுகள் இருப்பதாக தெரியவில்லை. எனவே அணியில் பவரை கொண்டிருப்பதை விட அணி வீரர்களுடன் இணைந்து பயணித்து சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் தருணங்களில் அங்கமாக இருப்பதே அவருக்கு முக்கியமாக இருக்கிறது”

இதையும் படிங்க: இதுல அந்த திட்டமே இல்ல.. அப்றம் தோத்துட்டு விதி மேல் பழிய போட்டு வருத்தப்படாதீங்க – அஸ்வின் தேர்வு பற்றி எச்சரித்த இர்பான் பதான்

“சுனில் கவாஸ்கரை விட 17 சதங்கள் கூடுதலாக அடித்துள்ள சச்சின் மொத்தம் 51 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஸ்பெஷலானவர்கள். ஏனெனில் அவர்கள் நிறைய டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளனர். ஆனாலும் விராட் கோலி 51 டெஸ்ட் சதங்களை தொடுவது மிகவும் கடினம் என்று எனக்கு தோன்றுகிறது” என கூறினார்.

Advertisement